வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: நாளை தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்..!!

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
BUS STRIKE
BUS STRIKE Source:oneindia
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மகளிர் பயணம் என்ற பெயரில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் அக்டோபர் 2-ந்தேதி முதல் (காந்தி ஜெயந்தி) இந்த திட்டம் 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்தத் திட்டத்தை எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் என விரிவுபடுத்தி ’வெற்றி பயணம்’ என முதல்வர் விஜய் வரும் அக்டோபர் 2-ம்தேதி முதல் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். அதேசோல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய சாதாரண அரசு பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களும், உயர் கல்வி பயிலும் மாணவிகளும் மற்றும் திருநங்கைகளும் கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டத்திற்கு வருமான வரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கைக் கட்டுப்பாடோ கிடையாது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (செப்டம்பர் 29) நள்ளிரவு முதல் நாளை (செப்டம்பர் 30) வரை தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. அதேசமயம், மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கொடியரசன் அறிவித்திருந்தார்.

அரசின் இந்த இலவச பயண திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், தனியார் பஸ்களிலும் மகளிரை கட்டணமின்றி பயணிக்க அனுமதித்து அதற்கான மானியத் தொகையை அரசே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.

தனியார் பஸ்கள்
தனியார் பஸ்கள்image credit-dailythanthi.com

தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவில், ஊட்டி தவிர மற்ற மாவட்டங்களில் மொத்தம் 7000 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 104 ஆண்டுகளாக பயணிகளுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகிறோம். தனியார் பஸ் கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசால் உயர்த்தி கொடுக்கப்பட்டது. அதன் பின்பு உயர்த்தப்படவில்லை.டீசல், உதிரிபாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில் தனியார் பஸ் தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தமிழகத்தில் நாளை மறுநாள் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்..!
BUS STRIKE

இந்தநிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள 'வெற்றிப்பயண' திட்டத்தால் மாநகர, நகர மற்றும் சாதாரண புறநகர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பார்கள். இதன்மூலம், தனியார் பஸ்கள் நஷ்டம் அடைந்து மேற்கொண்டு இயக்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.

மேலும், இத்தொழிலை சார்ந்துள்ள 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இலவச மகளிர் பயணத் திட்டத்திற்காக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, தனியார் பஸ்களிலும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு நஷ்டஈடாக தனியாருக்கும் மானியம் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை தனியார் பஸ்கள் ஓடாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை நடைபெறுவதாக இருந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் தொடர்பு கொண்டு எங்களது முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்த வகையில் நாளை நாங்கள் அறிவித்துள்ள கவண ஈர்ப்பு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

இதையும் படியுங்கள்:
கர்நாடகாவில் மகளிர் இலவச பேருந்து.. தனியார் வாகன ஓட்டுநர்கள் கொந்தளிப்பு!
BUS STRIKE

எனவே நாளை வழக்கம்போல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com