செம சான்ஸ்.. ஒரே நாளில் ரூ.2,160 சரிவு..! தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.!

தங்கம் விலை
Gold Price
Updated on

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்திப்பது, தற்போது வழக்கமாகி விட்டது. கடந்த மாதம் பிரபல எழுத்தாளரும், முதலீட்டாளருமான ராபர்ட் கியோசாகி தங்கத்தின் விலை 2035-ல் ஒரு சவரன் ரூ.9 லட்சமாக உயரும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை பெரும் சரிவைக் கண்ட நிலையில் என்னுடைய கணிப்பு தவறாகி விடுமோ எனத் தெரிவித்தார்.

2025-ம் ஆண்டின் தொடக்க காலத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.50,000-க்கும் குறைவே. ஆனால் இப்போது ரூ.1 லட்சத்தைக் கடந்து விட்டது. தங்கத்தின் விலை உயர்வுக்கு டாலர் சரிவு தான் மிக முக்கிய காரணம். டாலர் மதிப்பு சரிந்ததால், தங்கத்தின் மீதான முதலீடூகள் அதிகரித்தன.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து உயரந்து வரும் தங்கம் கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்துள்ளது. நேற்று (ஜூலை 23) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,08,000-க்கு விற்பனையானது

தற்போது ஆடி மாதம் என்பதால் தங்க நகைகளுக்கு பல நகைக் கடைகளில் சேதாரம், செய்கூலிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. விலை உயர்வால், ஆடைகளைப் போல் தங்கத்திற்கும் ஆடி ஆஃபர் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஒருவேளை தங்கத்திற்கும் ஆடி ஆஃபர் தள்ளுமபடி வழங்கப்பட்டால், இல்லத்தரசிகளுக்கு அது மிகப்பெரிய நற்செய்தியாக இருக்கும்.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 24) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 குறைந்து, ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.270 குறைந்து ரூ.13,230-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது

இதையும் படியுங்கள்:
2026-ல் அதிக லாபத்தை தரப்போகும் முதலீடு இதுதான்.! பிரபல முதலீட்டாளர் பளீச்..!
தங்கம் விலை
Gold
Gold

முதலீட்டு யுக்தி:

வெள்ளியைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது தான் நல்ல முதலீட்டு யுக்தி என நகைக்கடை விற்பனையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். ஏனெனில் வெள்ளியின் விலையானது திடீரென ஏறும்; ஆனால் ஏறிய வேகத்திலேயே திடீரென இறங்கி விடும்.

விலை குறையும் போது வெள்ளியில் முதலீடு செய்து, விலை உயரும் போது விற்று விடுவது தான் லாபத்தைக் கொடுக்கும். மேலும் விலை அதிகரிக்கும் என காந்திருப்பது, வெள்ளி முதலீட்டிற்கு ஒத்து வராது.

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஜூலை 23: 1 கிராம் - ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000

ஜூலை 22: 1 கிராம் - ரூ.13,430 1 சவரன் ரூ.1,07,440

ஜூலை 21: 1 கிராம் - ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760

ஜூலை 20: 1 கிராம் - ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200

ஜூலை 19: 1 கிராம் - ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஜூலை 23: 1 கிராம் - ரூ.245

ஜூலை 22: 1 கிராம் - ரூ.245

ஜூலை 21: 1 கிராம் - ரூ.240

ஜூலை 20: 1 கிராம் - ரூ.235

ஜூலை 19: 1 கிராம் - ரூ.235

இதையும் படியுங்கள்:
​ETF-களை நம்பி முதலீடு செய்யலாமா.? ராபர்ட் கியோசாகியின் திடீர் எச்சரிக்கை.!
தங்கம் விலை

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com