குட் நியூஸ்..! இனி பள்ளிகளில் தினமும் P.E.T வகுப்புகள் கட்டாயம் - அமைச்சர் ராஜ்மோகன்..!

அரசுப் பள்ளிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் உடற்கல்வி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்!
அமைச்சர் ராஜ்மோகன்!
அமைச்சர் ராஜ்மோகன்!Source:twitter
Updated on: 

தமிழகத்தில் பள்ளிகளுக்கான திருத்திய புதிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இன்று (அக்.13) வெளியிட்டுள்ளார். இதன்படி, பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் PET வகுப்பில் மாணவர்கள் விளையாடும் வகையில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு.விளையாட்டு வகுப்புகளை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் மாற்றக்கூடாது என்றும் திட்டவட்டம். மாணவர்களின் கல்வி பாடங்களோடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இப்புதிய கால அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வாரத்தின் 5 நாட்களும் உடற்கல்வி (PET) வகுப்புகளை நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். மாணவர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தைக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு அவர் நேரில் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், 1-12ஆம் வகுப்பு வரை உடற்கல்வி வகுப்பு வாரத்தில் 5 நாள்களும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையில் தகவல் வெளியாகியுள்ளது.

வாரத்தில் 3 நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம், மற்ற இரு நாள்கள் பாடத்திட்டம் சாராத மற்ற செயல்பாடுகளுக்கான (extra curricular activities) வகுப்புகளும் தேவைப்பட்டால் உடற்கல்வி வகுப்புகளாக மாற்றிக்கொள்ளலாம். அதன்படி மாணவர்களுக்கு தினந்தோறும் உடற்கல்வி வகுப்புகள் இருக்க வேண்டும்.

அதன்படி, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் (PET Period) கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு 90 நிமிட பாடவேளையும், 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு தலா 45 நிமிட பாடவேளையும் இந்த உடற்கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த உடற்கல்வி வகுப்புகளை, மற்ற பாட ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை நடத்துவதற்காக எந்தக் காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

உடற்கல்வி வகுப்புகளை தவிர்க்கக் கூடாது, புறக்கணிக்கக் கூடாது. மாணவ, மாணவர்கள் விளையாட ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டில்கூட சாதி, மதம் என எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது.

மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய கால அட்டவணை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : பள்ளிகளில் விரைவில் சிக்கன் பிரியாணி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!!
அமைச்சர் ராஜ்மோகன்!
logo
Kalki Online
kalkionline.com