இதை உடனே செய்யுங்க! இல்லையெனில் தமிழக அரசின் உதவித்தொகை கிடைக்காது!

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான தொகை 38.80 லட்சம் பேருக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Pension
TN PensionAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாட்டில் ஆதார் அடிப்படையில் இதுவரை 33.85 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்த ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான தொகை 38.80 லட்சம் பேருக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில பயனாளிகளுக்கு மட்டும் ஓய்வூதியத் தொகை கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள விவரங்களில் பிரச்சினை, ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு இணைக்கப்படாமல் இருப்பது, வங்கிக் கணக்கு செயலற்ற நிலையில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தொகை கிடைக்காமல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை (முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண் உதவித்தொகை) பெறுவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் (முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்றோர் நிதியுதவி போன்றவை) கீழ் அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்களின் வங்கிக் கணக்குடன் ஆதாரை (e-KYC / DBT Active) உடனடியாக இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, செப்டம்பர் 2026 முதல் (நடப்பு மாதம்) ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை (Aadhaar Based Payment System - ABPS) கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் மாதங்களில் உதவித்தொகை அனைத்தும் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே நேரடியாக (DBT) வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆதார் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மட்டுமே உதவித்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு தற்போது SNA-SPARSH என்ற புதிய ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு (Aadhaar-based payment system) மாறியுள்ளது.

உதவித்தொகை|ஓய்வூதியம்
உதவித்தொகை|ஓய்வூதியம்AI image

இதன் மூலம் உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதியோர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பலரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இவர்களில் இதுவரை தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் என்பிசிஐ (NPCI) மேப்பிங்கை இணைக்காதவர்களின் உதவித்தொகை தற்காலிகமாகத் தடைபட வாய்ப்புள்ளது.

இத்தடையைத் தவிர்க்க விரும்பும் பயனாளிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள சம்மந்தப்பட்ட வங்கிக் கிளைகளை நேரில் அணுகி ஆதார் இணைப்பை உடனடியாக உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில், உதவி தேவைப்பட்டால் அனைத்து தாலுகா ஆபிஸ்களிலும் சமூகப் பாதுகாப்பு திட்டத் தனி தாசில்தார்களை அணுக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Pension

மேலும் பயனாளிகள் ஆதார் இணைப்பை மேற்கொண்டதற்கான ஆவணங்களை, அந்தந்தப் பகுதி தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தச் செயல்பாட்டில் ஏதேனும் சந்தேகங்களோ அல்லது உதவிகளோ தேவைப்படுவோர், அந்தந்தப் பகுதி தாலுகா அலுவலகங்களில் செயல்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி தாசில்தார்களை நேரில் அணுகிப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைக்கப்படாத அல்லது விவரங்கள் சரியாக இல்லாத கணக்குகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதால், பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் ஆதார் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையே ஆதார் எண் முறையாக இணைக்கப்படாததால் சில பயனாளிகளுக்கு இந்த மாத உதவித்தொகை கணக்கில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் இந்த மாதத்திற்கான உதவித்தொகை 33.85 லட்சம் பயனாளிகளுக்கு வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு, முடங்கிய வங்கிக் கணக்குகள் அல்லது தரவுப் பிழைகள் காரணமாக ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் உள்ள பயனாளிகளுக்கு உதவ, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
மாதம் ரூ.210 முதலீடு செய்தால் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்..! எப்படி தெரியுமா ?
TN Pension

பயனாளிகள் இந்த முகாம்களை அணுகி தங்களின் தடையற்ற மாதாந்திர உதவித்தொகையை உறுதி செய்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com