#BREAKING: ரூ.2,47,130 கோடி கடன்.. வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல் குமார்.!

TNEB White Paper
TNEB
Updated on

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மின்வெட்டு பிரச்சனை தலை தூக்கியது. இதற்கு மின்சாரத்துறையை மீண்டும் சீரமைக்க வேண்டும்; சீரமைத்த பிறகு மின்வெட்டு பிரச்சினையே இருக்காது மின்சாரத் துறை அமலச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மின்சாரத் துறை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார் அமைச்சர். இதன்படி கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ​

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை சற்றுமுன் அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். இதில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான 21 ஆண்டுகளுக்கான கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டான 2025-2026-ல் மட்டும் ரூ.6,492 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். மின்சார வாரியத்தின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்திருப்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டி உள்ளதாகவும், தற்போதைய சூழலில் மின்சார வாரியத்துக்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் தற்போது 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 42,808 ட்ரான்ஸ்பார்மர்கள் 25 ஆண்டுகளை கடந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 25 ஆண்டுகள் கடந்த ட்ரான்ஸ்பார்மர் இனி பயன்படுத்த முடியாது. துணை மின் நிலையங்களைப் புதுப்பிக்க ரூ.8318 கோடி தேவைப்படுகிறது.

கடந்த ஆட்சியில் மின்சார துறையில் தனியாரை நுழைத்தது லாபத்திற்காக மட்டுமே என அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியும் மின்சாரத் துறையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. புதிதாக ட்ரான்ஸ்பார்மர்கள் வாங்கவும் இல்லை. புதிதாக பணிக்கு ஆட்களை எடுக்கவும் இல்லை.

மின் கட்டண உயர்வு இல்லை:

மின்வாரியத்தில் செலவினம் இருந்திருக்கிறது; வருவாயும் உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கு மட்டும் பலன் கிடைக்கவில்லை. மின்கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். ஆகைய்ல் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மின் துறையில் வருவாயை விட செலவு அதிகமாக இருப்பதால், அதனை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். மின் துறையை ஆரம்ப கட்டத்தில் இருந்து தெரிந்து கொண்டால் மட்டுமே, இதனை லாபகரமானதாக மாற்ற முடியும்.

போதிய அளவில் பணியாளர்கள் இல்லாததால் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை தற்போது சாத்தியமில்லை. மின்சார உற்பத்தியில் தனியாருக்கு வெளிப்படையாகவே அனுமதி அளிக்க இருக்கிறோம்.

Nirmal kumar abouut EPS
Nirmal kumar press meetImage credit: ANI
இதையும் படியுங்கள்:
போடாத சாலைக்கு இத்தனை கோடியா..?? முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு.!
TNEB White Paper

கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க, பத்து உயர் மட்ட குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்போது 65,921 காலிப்பணியிடங்கள் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,40,635 ஆக இருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் 16,782 பேர் பணி ஓய்வு பெற உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

கடந்த கால மின் கட்டண உயர்வால், யாரெல்லாம் பயனடைந்தார்கள் என்பதை முன்னாள் அமைச்சரிடம் கேட்க வேண்டியுள்ளது. செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்த போது பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமலேயே செலவினங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பணியாளர்கள் நியமனத்தில் தமிழகம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

2011-16 இல் அதிமுக ஆட்சியில மட்டும் ரூ.50,301 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்துறை நஷ்டத்தில் இருப்பதால், ஒவ்வொரு பகுதியாக சீரமைக்கப்படும். பணியாளர்கள் குறைவாக இருப்பதை மின்துறை அமைச்சர் சுட்டிக் காட்டி இருப்பதால், விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: கோல்டன் சான்ஸ்.. 3 நாட்களில் தங்கம் விலை ரூ.3,680 சரிவு.! மிஸ் பண்ணிடாதீங்க.!
TNEB White Paper
logo
Kalki Online
kalkionline.com