

அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வந்ததால், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பொருளாதார நிபுணர்கள் தங்கத்தின் விலை உயரும் கணித்திருந்தாலும், அதன் விலை குறைந்து வருவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை ரூ.3,000-க்கும் மேல் குறைந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழே இறங்குமா என்று சாமானிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் தங்கத்தின் ஏற்ற இறக்கம் காரணமாக ஆபரண நகையாக வாங்கும் சாமானிய மக்கள், அதில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
நேற்று (ஜூன் 24) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,350-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000-க்கு விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 25) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,680 குறைந்து, ரூ.1,05,120-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கு விற்பனையாகிறது. இதன்படி 3 நாட்களில் தங்கம் விலை ரூ.3,680 சரிந்துள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.230-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000-க்கு விற்பனையாகிறது
கடந்த ஆண்டு இதே ஜூன் 25-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,560-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், இடையில் இருக்கும் வித்தியாசமானது கடந்த ஆண்டு விறபனையான தங்கத்தில் கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.
அதேபோல் 2025 ஜூன் 25 அன்று 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால் இடையில் இருக்கும் வித்தியாசமானது, கடந்த ஆண்டு விறபனையான வெள்ளியின் விலையை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 24: 1 கிராம் - ரூ.13,350 1 சவரன் ரூ.1,06,800
ஜூன் 23: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480
ஜூன் 22: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800
ஜூன் 21: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800
ஜூன் 20: 1 கிராம் - ரூ.13,600 1 சவரன் ரூ.1,08,800
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூன் 24: 1 கிராம் - ரூ.240
ஜூன் 23: 1 கிராம் - ரூ.250
ஜூன் 22: 1 கிராம் - ரூ.255
ஜூன் 21: 1 கிராம் - ரூ.255
ஜூன் 20: 1 கிராம் - ரூ.255
தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் இப்போது முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். அதறகேற்ப பொருளாதார நிபுணர்களும் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் எனக் கணித்துள்ளனர்.
குறுகிய கால முதலீடுகளில் அதிக லாபத்தைக் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நிகராக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் நல்ல லாபத்தை அள்ளிக் கொடுக்கும்