ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு..! வரும் நவம்பர் 1 முதல் இனி இப்படி செஞ்சா தான் பணம் கிடைக்கும்..!

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Pension Scheme|ஓய்வூதிய விண்ணப்பங்கள்
Pension Scheme|ஓய்வூதிய விண்ணப்பங்கள்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களுக்கு ஓய்வூதியம் (Pension) கிடைப்பதற்கான விண்ணப்பங்களை இதுவரை ஆன்லைனிலும், காகித வடிவிலும் சமர்ப்பிக்க முடிந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் வரப்போகிறது. இனிமேல் ஓய்வூதிய விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் மாதம் முதல் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக அனைத்து மண்டல இணை இயக்குனர்கள், ஊதியம் மற்றும் கணக்குகள் அலுவலர்கள், கருவூல அலுவலர்கள் மற்றும் துணை ஊதியம், கணக்குகள் அலுவலர்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஓய்வூதிய விண்ணப்பங்களை (Pension Applications) நேரடியாகக் காகித வடிவில் சமர்ப்பிப்பதால், ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கும், நேரடியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கும் இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு, ஓய்வூதிய நடைமுறைகளில் தொடர்ந்து சிக்கல்கள் உருவாகியுள்ளன.

அதாவது, ஆன்லைனில் கொடுக்கும் விவரங்களும், காகிதத்தில் கொடுக்கும் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களும் சில நேரங்களில் மாறுபடுகின்றன. இதனால் எந்த விவரத்தை வைத்து விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காகத்தான் இனி ஒரே வழியில் விண்ணப்பங்களை பெற கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை முடிவு செய்துள்ளது.

எனவே அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அனைத்து ஓய்வூதிய விண்ணப்பங்களும் ஆன்லைனில் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அனுமதி அமைப்பு மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

tamil nadu government
tamil nadu government

அதாவது, ஓய்வூதிய விண்ணப்பங்கள் இனி OPPAS (Online Pension Proposal and Processing System) என்ற இணையவழி அமைப்பு மூலம் மட்டுமே ஏற்கப்படும். புதிதாக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள் மட்டுமல்ல, ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவர்கள், தங்களுடைய ஓய்வூதிய விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் இனிமேல் ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், திருத்திய ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களையும் இதே ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். தேவையான அனைத்து விவரங்களும், பொருந்தக்கூடிய ஆதார ஆவணங்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் அடுத்த மாதம் முதல் நேரில் அல்லது தாள் வடிவத்தில் (Physical copies) சமர்ப்பிக்கப்படும் ஓய்வூதிய விண்ணப்பங்கள் இனி ஏற்கப்படாது. அவை எந்தப் பரிசீலனையும் செய்யப்படாமல் தலைமை கணக்காயர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படும்.

இதையும் படியுங்கள்:
2027 ஓய்வூதிய உயர்வு எவ்வளவு தெரியுமா... இந்த குட் நியூஸ உடனே படிங்க!
Pension Scheme|ஓய்வூதிய விண்ணப்பங்கள்

எனவே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, புதிய நடைமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின்படி, இனிமேல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பெறப்படும் என்பதால், விவரங்கள் மாறுபடுவதால் ஏற்படும் குழப்பங்களை எளிதாக தவிர்க்க முடியும். மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஏதாவது விவரம் விடுபட்டிருக்கிறதா, தேவையான ஆவணங்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்ப்பதும் எளிதாகும்.

அதுமட்டுமின்றி, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பரிசீலிக்கப்படுவதால், காகித வேலைகளும் கைகளால் சரிபார்க்கும் நேரமும் பெருமளவு குறையும். தரவுகள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுவதால், கணக்கீடுகளில் ஏற்படும் மனிதத் தவறுகளும் குழப்பங்களும் தவிர்க்கப்படும்.

இதனால் விண்ணப்பங்களில் ஏற்படும் குழப்பங்களும் தாமதங்களும் குறைந்து, ஓய்வூதியப் பலன்கள் சரியான நேரத்தில் கிடைக்கவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கும் சேவைகளுக்கும் தமிழக கருவூலம் மற்றும் கணக்குகள் துறை வலைத்தளம் அல்லது களஞ்சியம் போர்ட்டல் ஆகியவற்றை அணுகலாம்.

இதையும் படியுங்கள்:
பிறந்த குழந்தைகளுக்கும் இனி பென்ஷன் நிச்சயம்: ஓய்வூதிய திட்டங்களில் சூப்பர் மாற்றம்!
Pension Scheme|ஓய்வூதிய விண்ணப்பங்கள்

மேலும் இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது தொழில்நுட்ப உதவிக்கு துறையின் இலவச உதவி எண்ணான 1800 599 5100 அல்லது 044-40172172 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com