

மத்திய அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக 1995-ம் ஆண்டு 'தேசிய சமூக உதவித் திட்டம்' (NSAP) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இத்திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரை அடுத்த அஞ்சு வருஷத்துக்கு தொடர்ந்து நடத்த ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக மொத்தம் ரூ.53,428 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நீட்டிப்புடன் சேர்த்து, இத்திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஓய்வூதியத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன:
மத்திய அமைச்சரவை ஒப்புதலின்படி, தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) மற்றும் அதன் கீழ் செயல்படும் துணைத் திட்டங்களின் பெயர்கள் 'பிரதான் மந்திரி' (Pradhan Mantri) பிராண்டிங்கிற்கு மாற்றப்பட்டுள்ளன.
* தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) இனி 'பிரதான் மந்திரி சாமாஜிக் சகாயதா யோஜனா' (Pradhan Mantri Samajik Sahayata Yojana) என்று அழைக்கப்படும்.
* இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் இனி 'பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா பென்ஷன் யோஜனா' (Pradhan Mantri Vridhavastha Pension Yojana) என மாற்றப்பட்டுள்ளது.
* இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் (IGNWPS) இனி 'பிரதான் மந்திரி வித்வா ஓய்வூதியத் திட்டம்’ (அல்லது விதவா பென்ஷன் யோஜனா)
(Pradhan Mantri Vidhawa Pension Yojana) என மாற்றப்பட்டுள்ளது.
* இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (IGNDPS) இனி ‘பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் ஓய்வூதியத் திட்டம்’
(Pradhan Mantri Divyangjan Pension Yojana) என மாற்றப்பட்டுள்ளது.
* தேசிய குடும்ப நலத் திட்டம் (NFBS), இனிமேல் ‘பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா’ (Pradhan Mantri Parivar Labh Yojana) என்று அழைக்கப்படும்.
முக்கிய மாற்றங்கள்:
அதேசமயம் பென்சன் பெறுபவர்களுக்கான தகுதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (Divyangjan) வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில் மிக முக்கியமான தளர்வுகளும் மாற்றங்ககளைச் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மறுபுறம், முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கான தற்போதைய ஓய்வூதியத் திட்டங்கள், மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் பழையபடியே எவ்வித நிதியுதவி மாற்றமும் இன்றி தொடரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துல சில முக்கிய தளர்வுகளும் நிதியுதவி உயர்வும் கொண்டு வந்திருக்காங்க. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் தகுதி வரம்பு 80% இயலாமையில் (ஊனத்தின் அளவு) இருந்து 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமானோர் பயனடைவர். அதன்படி இனிமேல் 80% இயலாமை இருக்கணும்னு அவசியம் இல்லை, 40% இயலாமை இருந்தாலே இந்த பென்ஷன் கிடைக்கும்.
அதாவது, 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊன அளவு கொண்டவர்கள் இத்திட்டத்தின் பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், இனி ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
அதுமட்டுமில்லாமல், ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பையும் தூக்கிட்டாங்க. இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டு பிறந்த குழந்தையிலிருந்தே (0 வயசுல இருந்தே) உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஊனமுற்றோர் ஓய்வூதிய ஆதரவைப் பெறுவதை எளிதாக்குவதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 0 முதல் 79 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.375-ம், 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.625-ம் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த புதிய பெயர் மாற்றங்கள் மற்றும் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட தகுதி விதிகள், பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் புதிய உதவி விகிதங்கள் குறித்த விவரங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவின் மூலம் இந்தியா முழுவதும் (36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்) உள்ள சுமார் 3.20 கோடி ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் பணம் எல்லாமே நேரடியா பயனாளிகளின் வங்கி கணக்குலயே (DBT) போய்ச்சேரும்.