TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு அறிவிப்பு வெளியீடு: முழுவிவரம் உள்ளே..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026ம் ஆண்டுக்கான குரூப் 2/ குரூப் 2A தேர்வு அறிவிக்கையை வெளியிட்டது.
TNPSC
TNPSC
Updated on

குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (Group 2 & Group 2A) அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நேற்று (ஆகஸ்ட் 11-ம்தேதி) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி - TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருவது வழக்கம்.

குரூப் 2 மற்றும் குரூப் 2A என்பது தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்புத் தேர்வாகும்.

துணைப் பதிவாளர் மற்றும் நகராட்சி ஆணையர் முதல் வருவாய் அலுவலர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் வரையிலான பதவிகளுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதாவது, சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு2), தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பல்வேறு அரசு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வை டிஎன்பிஎஸ்சி (TNPSC) நடத்தி வருகிறது.

வருடாந்திர தேர்வு அட்ட வணையில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தேர்வுகளுக்கும் குறித்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

டிஎன்பிஎஸ்சி|ஆன்லைன் விண்ணப்பம்
TNPSC|ஆன்லைன் விண்ணப்பம்

இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் வரும் நவம்பர் 1-ம்தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIΑ பணிகள்)க்கான அறிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஆகஸ்ட் 11-ம்தேதி (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை (ஆன்லைன் விண்ணப்பம்) சமர்ப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்: பட்ஜெட்டில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு..!
TNPSC

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு நவம்பர் 1-ம்தேதி நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மூலம் 41 காலியிடங்களுக்கும், குரூப் 2ஏ மூலம் 780 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு நிலை தேர்வுகள் மூலம் இடங்கள் நிரப்பப்படும். நேர்காணல் தேர்வு கிடையாது.

தமிழக அரசின் பல்வேறு முதன்மை மற்றும் நிர்வாகப் பதவிகளில் சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுதுறைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி TNPSC உள்ளிட்ட எல்லா தேர்வுகளுக்கும் ஒரே ஆப்பில்..!
TNPSC

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகளில் குரூப்-4, குரூப்-2 தேர்வுகளுக்குத்தான் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com