TNPSC-யின் புது அறிவிப்பு: 61 உதவி அரசு வழக்கறிஞர் வேலை அறிவிப்பு..!

TNPSC Group4
TNPSC
Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை - II (Government Assistant Public Prosecutor Grade - II) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சட்டம் படித்த பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் TNPSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ மூலம் டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 61

பணியிடம் : தமிழ்நாடு

ஆரம்ப நாள் : 02.12.2025

கடைசி நாள் : 31.12.2025

பதவி: Assistant Public Prosecutor, Grade – II

காலியிடங்கள்: 61

சம்பளம்: Rs.56,100 – 1,77,500/-

கல்வி தகுதி: Must possess B.L., Degree of any University or Institution accredited by the University Grants Commission for the purpose of its grant; Must be a member of the Bar and have worked actively in criminal courts for at least five years.

விண்ணப்பதார்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமாக கொண்டு கற்றிருக்க பெற்றிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் இரண்டாம் வகுப்பு தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பதவிக்கு 01.07.2025 தேதியின்படி, தேர்வர்கள் 26 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். ஒசி பிரிவினருக்கு உச்சபட்சமாஅக் 36 வயது வரையும், ஒசி மாற்றுத்திறனாளிகளுக்கு 46 வரையும், முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வரையும் இருக்கலாம். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ ஆகிய பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்ப கட்டணம்:

  • One Time Registration Fee – Rs.150/-

  • Preliminary Examination Fee – Rs.100/-

  • Mains Examination Fee – Rs.200/-

Fee Concession:

  • Ex-Servicemen – Two Free Chances

  • BCM, BC, MBC / DC – Three Free Chances

  • Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination

  • Main Examination

  • Interview

இதையும் படியுங்கள்:
ஷாக்கிங் நியூஸ்..! 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் வெள்ளியின் விலை இவ்வளவு உயருமா ?
TNPSC Group4

தேர்வு எப்படி அமையும் :

முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. இது பொது அறிவு - 75, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 25, சட்டம் - 100 என மொத்தம் 200 கேள்விகள் கொண்டு அமையும். மொத்தம் 300 மதிப்பெண்களில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். கொள்குறி வகையில் கேள்வி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமையும்.

முதன்மைத் தேர்வு 5 தாள்கள் கொண்டு நடைபெறும். இதில் முதல் தாள் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகும். மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் தேர்ச்சி பெற தமிழ் பாடத்தில் 40 மதிப்பெண்கள், இதர தாள்கள் சேர்த்து 120 மதிப்பெண்கள் பெற வேண்டும். இத்தேர்வுகள் அனைத்தும் விரிவாக விடையளிக்கும் வகையில் அமையும்.நேர்முகத் தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 460 மதிப்பெண்கள் பெற்ற மதிப்பெண்கள் கொண்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025

தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2026, 09.30 am to 12.30 pm

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
TNPSC மட்டும் அல்ல.. ரயில்வேயிலும் பெரிய வாய்ப்பு.! இளைஞர்களே தவற விடாதீர்!
TNPSC Group4

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com