குரூப் 2, 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

Group 5A Exam will be held as announced
Group 5A Exam will be held as announced
Updated on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A பதவிகளுக்கான தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டது.

இதில், தொகுதி-IIA பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (கொள்குறி வகை) தேர்வானது 15.03.2026 முப மற்றும் தொகுதி-II (ம) IIA பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-I தமிழ் தகுதித் தேர்வானது 16.03.2026 பிப நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை 2 நிமிடங்களில் சரிபார்ப்பது எப்படி.? முழு வழிகாட்டி..!
Group 5A Exam will be held as announced
logo
Kalki Online
kalkionline.com