

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC, MTC, SETC) பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, சேலம், திருநெல்வேலி மண்டலங்கள், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் மொத்தம் 1518 பணியிடங்கள் (TNSTC வேலைவாய்ப்பு) நிரப்பப்பட உள்ளன.
தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியிலான பணிகள், இன்ஜினியரிங் பணிகள் உள்ளிட்டவற்றிற்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதேபோல, அவ்வப்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகளும் வெளியாகிறது. அதாவது அப்ரெண்டீஸ் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
இதில் இன்ஜினியரிங் பிரிவில் 457 இடங்களும், டெக்னீசியன் பிரிவில் 438 இடங்களும், இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 623 இடங்களும் உள்ளன. இதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 623
TNSTC - விழுப்புரம் - 100
TNSTC - கும்பகோணம் - 251
TNSTC - மதுரை - 37
TNSTC - திருநெல்வேலி - 93
MTC - சென்னை - 62
SETC - தமிழ்நாடு - 80
காலிப்பணியிடப் பிரிவு விவரம்:
இன்ஜினியரிங் அப்ரென்டிஸ்: 457
இடங்கள்டெக்னீசியன் (டிப்ளமோ)
அப்ரென்டிஸ்: 438 இடங்கள்
இன்ஜினியரிங் அல்லாத கிராஜுவேட் அப்ரென்டிஸ்: 623 இடங்கள்
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / பட்டப்படிப்பு (2022 - 2026ல் தேர்ச்சி பெற்றவர்கள்)
தேர்ச்சி பெற்ற ஆண்டுகள்: 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026-ல் டிகிரி/டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
பட்டதாரி அப்ரெண்டீஸ் : ரூ.12.300
டிப்ளமோ முடித்தவர்களுக்கு : ரூ.10,900
என்ஜினியரிங் அல்லாத டிகிரி பணியிடங்ளுக்கு - ரூ.12,300.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2026
இதர தகுதி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும் : nats.education.gov.in
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு கிடையாது. டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விண்ணப்பிக்க விரும்பமும் உள்ளவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.