தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா..? சென்னையில் இருந்து 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

republic day spl bus
republic day spl bus
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.23, 24, 25, 26 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 550 பேருந்துகளும், 24ம் தேதி (சனிக்கிழமை) 405 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 100 பேருந்துகளும் 24ம் தேதி (சனிக்கிழமை) அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 பெங்களூரு திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து ஜன.23ம் தேதி 550, ஜன.24ம் தேதி 405 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து ஜன.23ம் தேதி 100, ஜன.24ம் தேதி 90 சிறப்பு பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஜனவரி 26-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
துருப்பிடித்த இரும்பு தோசைக்கல்லை புத்தம் புதியதாக மாற்றும் எளிய வழிகள்!
republic day spl bus
இதையும் படியுங்கள்:
பொங்கல் பரிசு ரூ.3,000-ஐ அரசுக்கே திருப்பி அனுப்பிய நெல்லை கிறிஸ்டோபர்..! காரணம் இது தான்..!
republic day spl bus
logo
Kalki Online
kalkionline.com