நாளை 'டெட்' தேர்வு: தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன..?

TET Exam
Tamilnadu Government
Published on

தமிழ்நாட்டில் நாளை நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய இறுதி வேதிகளில் டெட் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 4.80 லட்சம் பேர் எழுதவுள்ளனர். நவம்பர் 15 சனிக்கிழமை அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும், நவம்பர் 16ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் நடைபெற உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை எழுத இதுவரையில், 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு 367 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை எழுத 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1,241 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டு நாட்கள் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்க ஆசிரியர் தேர்வு வாரியம், 32 சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை சில தேர்வர்கள் மறந்து விட்டதால், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு உதவுமாறு தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் https://trb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தேர்வர்கள் எளிதாக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்திற்குச் சென்று டெட் ஹால் டிக்கெட் பகுதியைத் தேர்வு செய்து, தாள்-1 அல்லது தாள்-2 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது விண்ணப்ப எண் அல்லது இ-மெயில் முகவரியை உள்ளிட்டு, பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆசிரியர்களைப் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு முன்வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் தமிழ்நாட்டில் நடக்கும் முதல் டெட் தேர்வு இது என்பதால், ஆசிரியர்கள் மற்றும் புதிய தேர்வர்கள் மத்தியில் இந்த டெட் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! 2 ஆண்டுகளில் இத்தனை டெட் தேர்வுகளா..?
TET Exam

தேர்வர்கள் கவனத்திற்கு:

1. டெட் தேர்வு எழுத பெறும் தேர்வர்கள் அனைவரும் தவறாமல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும்.

2. ஹால் டிக்கெட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனே சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

3. தேர்வு நடைபெறுவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

4. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் என்பதால் 8:30 மணி முதல் 9:30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.

5. தேர்வர்கள் ஆதார், பான் காரடு, பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

6. இரு தினங்களிலும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்பதால், அதற்கு முன்னதாக தேர்வுகள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆண்டிற்கு 3 சிறப்பு டெட் தேர்வுகள்: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பள்ளி கல்வித்துறை..!
TET Exam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com