#JUST IN : கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புது சிக்கல்..! ஏஜென்சி நோக்கி படையெடுக்கும் மக்கள்..!
நாடு முழுவதும் தற்போது கேஸ் சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ள காரணத்தால், ஆங்காங்கே ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. அதோடு சில ஹோட்டல்களில் உணவுப் பட்டியல்களும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கேஸ் சிலிண்டர்களின் வரத்துக் குறைவால் சில ஹோட்டல்களில் விறகு அடுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால், எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றும் இன்டக்ஷன் ஸ்டவ் போன்ற அடுப்புகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மொபைல் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்யும் வசதி, தற்போது செயல்படவில்லை என பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு கேஸ் சிலிண்டர் வாங்கிய பிறகு 21 நாட்கள் கழித்து மற்றொரு கேஸ் சிலிண்டர் புக் செய்யும் வசதி செயல்பாட்டில் இருந்தது. இந்நிலையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், இந்த கால அவகாசம் 25 நாட்களாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது கேஸ் சிலிண்டரை மொபைல் போன் மூலம் புக்கிங் செய்யும் வசதியும் தற்போது செயல்படவில்லை என பொதுமக்கள் சார்பில் புகார்கள் அதிகரித்து வருகின்றன. ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் புக் செய்யும் வசதி தடைபட்டுள்ளது.
பொதுமக்கள் பலரும் இலவச ஐவிஆர்எஸ் (IVRS) மொபைல் எண்ணை பயன்படுத்தி கேஸ் சிலிண்டர்களை புக் செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது இந்த ஐவிஆர்எஸ் எண்களை அழைத்தால் எவ்வித பதிலும் இல்லாமல், அழைப்பு துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் சார்பில் புகார்கள் எழுந்து வருகின்றன.
ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் சூழலில், தற்போது புதிதாக கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் பலரும் செய்வதறியாமல் இருக்கின்றனர். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் வாங்க, பொதுமக்கள் நேரடியாக சிலிண்டர் அலுவலகங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள சாலையோர மற்றும் பெரிய ஹோட்டல்கள் விறகு அடுப்புகளை வைத்து அமைக்க முன்வந்துள்ளன. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமின்றி CNG ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் CNG கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் இதற்கு அரசு ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு உற்பத்தியில் LPG 40% ஆக இருக்கும் சூழலில், உற்பத்தியை மேலும் 10% உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் உற்பத்தியின் மூலம் ஓரளவு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வந்து விட்டால், தற்போது நிலவி வரும் தற்காலிகமான சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

