40% தான் நம்மகிட்ட இருக்கு! மீதி 60% எங்கே? அம்பலமாகும் LPG ரகசியம்.!

Gas cylinder
Gas cylinder
Published on

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவி வரும் கடுமையான போரால், உலகளவில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போரால், கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மூஸ் நீரணையை ஈரான் அரசு மூடியது. இதன் காரணமாக பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து, விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே தேவையான அளவு கேஸ் சிலிண்டர் இருப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே கேஸ் சிலிண்டர்களை யாரும் பதுக்கி வைக்க கூடாது என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

அதோடு கேஸ் முன்பதிவு செய்யும் கால அவகாசமும் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே உற்பத்தியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது தான்.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் LPG கேஸ் சிலிண்டருக்கான இறக்குமதி 60 சதவீதத்திற்கும் அதிகம். இதில் அதிகபட்சமாக கத்தார் நாட்டில் இருந்து இந்தியா 27% அளவிற்கு LPG இறக்குமதியை செய்கிறது

இந்தியாவில் LPG உள்நாட்டு உற்பத்தி, முக்கியமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு செயலாக்க ஆலைகளில் இருந்து கிடைக்கிறது.

இந்தியா ஆண்டுக்கு சுமார் 35% முதல் 41% வரை LPG-யை உற்பத்தி செய்கிறது. அதாவது 12.8 மில்லியன் மெட்ரிக் டன் LPG உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கிடைக்கிறது. ஆனால் இந்தியா கொள்முதல் செய்யும் LPG-யின் அளவு, உள்நாட்டு உற்பத்தியை விட 20% அதிகமாகும்.

தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரவேண்டிய LPG எரிவாயு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு இந்த பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை வைத்து நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் விநியோகத்தை மேற்கொள்ள இயலாது. இதன் காரணமாகவே தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இது ஒரு தற்காலிகமான தட்டுப்பாடாகவே இருந்தாலும், இந்தியா இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்

இதையும் படியுங்கள்:
Flashback: வட்டி கட்ட பாட்டு பாடிய SPB..! ஏன் தெரியுமா..?
Gas cylinder

இந்தியா இறக்குமதி செய்யும் LPG அளவு:

* கத்தார்: 27%

* ஐக்கிய அரபு அமீரகம்: 26%

* சவுதி அரேபியா: 19%

* குவைத்: 8% - 10%

* அமெரிக்கா: 6% - 7%

* பிற நாடுகள்: 5% - 7%

வெளிநாட்டு இறக்குமதி: 58% - 61%

உள்நாட்டு உற்பத்தி: 35% - 41%.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த LPG-யில் 87% வீட்டு உபயோக எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் படிப்படியாக மூடப்பட்டு வரும் நிலையில், சில ஹோட்டல்களில் உணவுகளின் பட்டியலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதே நிலை தொடரும் பட்சத்தில், ஹோட்டல்கள் மூடப்படுவதோடு வீட்டு உபயோக சிலிண்டருக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
இனி விரல் நுனியில் பட்டா வரலாறு: விரிவாக்கம் அடையும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
Gas cylinder

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com