தமிழக அரசியலில் விஜயகாந்தை போல விஜயும் திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார் – டிடிவி.தினகரன்..!

ttv dhinakaran
ttv dhinakaran
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று விஜய் பற்றி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜயகாந்த் முதன்முறையாக அரசியல் நுழையும் போது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தினாரோ? அதேபோன்று விஜய்யும் அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்திருந்தது. அந்த தேர்தலில் கணிசமான அளவில் வாக்குவங்கியை பெற்றார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் விஜயகாந்த் தலைமையிலான தேதிமுக கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக படுதோல்வி அடைந்து எதிர்கட்சி ஆகும் அந்தஸ்தையும் இழந்தது. அதனால் , விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இவ்வாறு விஜயை விஜயகாந்துடன் ஒப்பிட்டு திமுகவின் வாக்குவங்கிக்கு , மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று தினகரன் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
முத்து படத்தில் ரஜினிக்கு டூப் போட்ட பிரபல காமெடி நடிகர் இவர் தான்.. அவரே சொன்ன பதில்.!
ttv dhinakaran
logo
Kalki Online
kalkionline.com