'Blast Blast' என எதிர்பார்த்தால் 'Waste Waste'-ஆக இருக்கு! - Budget பற்றி மு.க.ஸ்டாலின்விமர்சனம்..!!

தமிழக வெற்றிக் கழகம் அமைந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Stalin Vs vijay
Stalin Tn Budget Youtube , Deccan Herald
Updated on

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் தலைமை அமைந்த புதிய அரசாங்கம் சட்டமன்றத்தில் இன்று புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் ஏராளமான பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே நேரம் முந்தைய அரசின் திட்டங்களும் தற்போதைய ஆட்சியில் தொடர்கின்றன. ஒரு சில பழைய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி, புதிய திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

தமிழக அரசின் பட்ஜெட்டினை அதன் கூட்டணி கட்சிகள் பலரும் ஆதரித்து பேசியிருந்தனர். அதே நேரம் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த பட்ஜெட்டை மிகவும் கடுமையாக சாடி வருகிறது. திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் பட்ஜெட்டினை விமர்சனம் செய்து வருகிறார்கள். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் பட்ஜெட்டினை 'வேஸ்ட் வேஸ்ட் ' என்று தனது x பதிவில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஸ்டாலின் பதில் " இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,

'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!

அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!

மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,

விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!

அதுமட்டுமல்ல,

- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,

- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,

- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,

- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!

மொத்தத்தில்,

சொந்தமாகவும் யோசிக்காத -

சொன்னதையும் செய்யாத -

சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது." என்று அவரது பதிவு இருந்தது.

Stalin Controversy against Budget
Stalin X postStalin X
இதையும் படியுங்கள்:
தமிழக பட்ஜெட் 2026-27: திமுக Vs தவெக: துறைவாரியாக ஒப்பீடு..!!
Stalin Vs vijay
இதையும் படியுங்கள்:
தமிழக பட்ஜெட் 2026-27: சிறப்பு திட்டங்கள்... துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி..!!
Stalin Vs vijay
இதையும் படியுங்கள்:
பட்ஜெட் 2026-27: ஒரு ரூபாயின் வரவு, செலவு கணக்கு இதுதான்..!
Stalin Vs vijay
இதையும் படியுங்கள்:
#BREAKING: தமிழக பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை :
Stalin Vs vijay

அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்கள் சந்திப்பில் பட்ஜெட் பற்றி தனது விமர்சனங்களையும் முன்வைத்தார். “பெயர் மாற்றம் செய்வதற்காவா முதல்வர் 10 நாட்களாக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்? திமுக அரசின் திட்டங்களை அவர்கள் கட்சி பெயரில் உள்ள வெற்றி என்று ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றம் செய்தது மட்டும்தான் இவர்களின் மாற்றம். இந்த பட்ஜெட்டிற்கு ஜீரோ மதிப்பெண் தான் வழங்க முடியும் . ஆனால், நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எங்களது நன்றிகள்! எந்த ஒரு புதிய திட்டங்களும் தொலைநோக்குப் பார்வைகளும் இல்லாததால் இது ஒரு பூஜ்ஜிய பட்ஜெட்" , என்று உதயநிதி குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் , தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறை பற்றி பேசும் பொழுது தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளதாக நிதியமைச்சர் பெருமையாக பேசி இருக்கிறார். இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று கூறும்போது அது திமுகவின் வெற்றியாகும். திமுக ஆட்சியின் சாதனைகளை ஒப்புக்கொண்ட நிதி அமைச்சருக்கு திமுகவின் சார்பில் நன்றி , இது உதயநிதி பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com