ஆபரேஷன் 118 - பரபரக்கும் பனையூர்..! காலையிலேயே மாஸ்டர் பிளானை தொடங்கிய விஜய்.!

TVK Vijay
TVK Vijay
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. திராவிட கட்சிகளை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது தவெக. தேர்தல் முடிவுகளின் படி தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் போட்டியிட்டு, 108 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தவெக-வின் பலம் 107 ஆக குறையும். ஆனால் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால், கூடுதலாக 11 எம்எல்ஏக்களை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைக்க தவெக-வை அழைக்குமாறு பொறுப்பு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழுமா அல்லது திமுக ஆட்சியே தொடருமா என்ற எதிர்பார்ப்பில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் முதல் தேர்தலிலேயே ஒட்டுமொத்தமாக 1.72 கோடி வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். இதன்மூலம் ஆட்சி மாற்றத்தையே தமிழக மக்கள் எதிர்பார்த்தனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில் தவெக, திமுக மற்றும் அதிமுக மூன்று கட்சிகளுக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி மூலம் ஆட்சி அமைக்க தவெக முடிவு செய்துள்ளது. இன்று பனையூரில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் யாரை கூட்டணிக்கு அழைப்பது மற்றும் ஆட்சி அமைப்பது குறித்த விவாதங்கள் கலந்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 1.12 கோடி வாக்குகளைக் கடந்தது தவெக.! தமிழகத்தை அலற விடும் விசில் சத்தம்.!
TVK Vijay

சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு இன்று காலையிலேயே மிகவும் முக்கியமான முடிவு ஒன்றை விஜய் எடுத்துள்ளார். தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் எனவும் விஜய் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
வெயிலில் வாடிய கேமராமேனுக்கு விஜய் செய்த மனிதாபிமான செயல்..! வைரலாகும் விஜய்யின் மனிதாபிமான வீடியோ..!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com