உங்களுக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி ஆகும்? இதோ பயிர்க்கடன் தள்ளுபடி ஒப்பீட்டு அட்டவணை..!

ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றோருக்கு ரூ.75,000 தள்ளுபடி; 13.34 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம்!
பயிர்க்கடன் தள்ளுபடி
பயிர்க்கடன் தள்ளுபடிsource:twitter
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தவெக அரசு பொறுப்பற்று 100வது நாளை ஒட்டி 110 விதியின் கீழ் பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் விஜய் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூபாய் 75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ரூபாய் 1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 75,000 தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்.

பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், "மக்கள் எங்கள் உயிர் என்றால் விவசாயிகள் உயிர்நாடி. எந்த ஒரு நாடு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறதோ, அந்த நாடு வளமுடன் செழிப்புடன் இருக்கும். அதன்படி தவெக அரசு பதவி ஏற்றவுடன் 15 நாட்களுக்குள் குறு, சிறு விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் விவசாய அமைப்புகளிடம் இருந்து கருத்துகள் பெற்று பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வரம்பு உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடியை முழுவதுமாக வழங்கக் கோரிய விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. அதன்படி கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூபாய் 75,000 வரை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

75,000 முதல் 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கு ரூபாய் 75,000 மட்டும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் கூடுதலாக 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். 1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 35,000 தள்ளுபடி வழங்கப்படும்.

அரசுக்கு கடுமையான நிதிச்சுமை இருந்தபோதிலும் இந்த கூதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு ரூபாய் 953.06 கோடி கூடுதல் சுமை ஏற்படும்" என்று கூறினார். இதற்கு முன் ரூபாய் 75,000 வரை முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, ரூபாய் 1 லட்சம் வரை பெற்றவர்களுக்கு ரூபாய் 35,000 மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TN CM vijay|
TN CM vijay|image credit- linkedin.com

கூட்டுறவு வங்கிகளில் மே 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரை பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ரூபாய் 75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூபாய் 5,932 கோடி வரை கூடுதல் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள விவசாய பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க கோரிக்கை வைத்தனர். ஆகஸ்ட் 7ல் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ரூபாய் 75,000 - 1 லட்சம் வரை பயிர்க்கடன் வாங்கி இருந்தால் அதிகபட்சம் ரூபாய் 75,000 ரூபாய் வரை கடன் தள்ளுபடியும், 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக கடன் தள்ளுபடியும் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தக் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 13.34 லட்சம் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பலன் பெறுவார்கள். இந்தக் கூடுதல் சலுகையால் அரசுக்கு ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி: ஒப்பீட்டு அட்டவணை

முன்பு:

  • ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

  • ரூ. 75,000-க்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி

இன்றைய அறிவிப்பு:

  • ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி

  • ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி

  • ரூ. 1 லட்சத்துக்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி

வித்தியாசம்:

ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கடன் வாங்கியவர்கள்: முந்தைய அறிவிப்பின்படி ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி பெறத் தகுதியுடையவர்களாக இருந்தனர்.இவர்களுக்கான தள்ளுபடி தொகை ரூ. 75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஏற்கெனவே ரூ. 35,000 தள்ளுபடி பெற்றிருந்த விவசாயிகள், தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் கூடுதலாக ரூ. 40,000 சேர்த்து மொத்தம் ரூ. 75,000 தள்ளுபடி பலனைப் பெறுவர்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : ஜூன் மாதம் நடைபெற்ற UGC NET தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு..!
பயிர்க்கடன் தள்ளுபடி
logo
Kalki Online
kalkionline.com