தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் தவெக தலைவர் விஜய்!

TVK Vijay
TVK Vijay
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியைத் தொடங்கினார். அதன்பின்னர் கட்சியினர் கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின் கட்சி கொடி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமா துறையை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்தக் கட்சியின் முதல் மாநாடு நாளை 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.

மாநாடு நடக்கும் இடத்தில் பெரிய பெரிய பேனர்கள், கட்டவுட்கள், கொடிக்கம்பம் முதல் அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தவெக மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வந்தனர்.

இதனையடுத்து இந்த மாநாட்டில் விஜய் பேசியது பிற கட்சிக்காரர்களுக்கும் மக்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனால், அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிக்காரர்களும் இன்றுவரை விமர்சனம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், விஜய் அந்த விமர்சனங்களைக் கண்டுக்கொள்ளாமல் அவர் அரசியல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். பண்டிகை மற்றும் ஸ்பெஷல் நாட்களில் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், அடுத்து கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல என்ன செய்யலாம் என்று மட்டுமே யோசித்து வருகிறார்.

அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்றும், அவர் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் 27 ஆம் தேதி கோவையில் தொடங்கி, நெல்லையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் தங்கி, மக்கள் சந்திப்பு, நிர்வாக ஆலோசனைக் கூட்டம், பொதுமக்கள் கூட்டம், மற்றும் நல உதவி நிகழ்ச்சிகள் என பிரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமேரிக்கா!
TVK Vijay

ஆகையால், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய், முழு மூச்சாக அரசியலில் இறங்கப்போகிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. மாநாட்டில் அவரது பேச்சு பிற கட்சிக்காரர்களுக்கு மட்டுமே பிடிக்கவில்லை என்றாலும், தமிழக மக்களின் வரவேற்பு அதிகம். அப்படியிருக்கையில், இந்த சுற்றுப்பயணம் மேலும் மக்களிடையே வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com