என்ன நடக்கிறது பனையூரில்? அவசர அவசரமாக கூடும் தவெக எம்எல்ஏக்கள்.!

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்!
தவெக எம்எல்ஏக்கள்
TVK MLA's
Updated on

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை (ஆகஸ்ட் 5) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தவெக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்துள்ளது தவெக தலைமை.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 2 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், நாளை (ஆகஸ்ட் 5) நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (ஆகஸ்ட் 6) வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் விவசாய நலன் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத்

இதையும் படியுங்கள்:
தவெக-வின் 'வேளாண் பட்ஜெட்' ரகசியம்.! குட் நியூஸ் சொன்ன அமைச்சர்.!
தவெக எம்எல்ஏக்கள்

நாளை சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் விவாதங்களில் முன் வைக்க வேண்டிய கருத்துகளும் விவாதிக்கப்பட உள்ளது.

பட்ஜெட்டின் சாராம்சம், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு வரும் விமர்சனங்களை எப்படி கையாள வேண்டும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பு தான், கடைசியாக அனைத்து எம்எல்ஏக்களும் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடினர். அதற்குப் பிறகு இப்போது தான் எம்எல்ஏக்கள் அனைவரும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்று கூட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay
TVK Vijay
இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்.. திடீர் விலை சரிவு.. தங்கம் வாங்கத் துடிப்போருக்கு அடித்தது ஜாக்பாட்..!
தவெக எம்எல்ஏக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டுள்ள தவெக அரசு, விவசாயிகளின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருபுறமிருக்க, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. நேற்று (ஆகஸ்ட் 3) தஞ்சாவூரில் நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவெக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினின் அடாவடிப் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தவெக-வினருக்கு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எல்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று தான் இவருக்கு நிமந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் மற்றுமொரு திமுக எம்எல்ஏவும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

logo
Kalki Online
kalkionline.com