செம சான்ஸ்.. திடீர் விலை சரிவு.. தங்கம் வாங்கத் துடிப்போருக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்ததும், உலக சந்தையிலும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 10% அளவிற்கு தங்கம் விலை சரிந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் ஏற்ற இறக்கத்தை கண்டாலும், பெரிய அளவில் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கப் போகிறது என்பதை பொருளாதார நிபுணர்கள் ஓரளவு கணித்துள்ளனர். அமெரிக்க வங்கியில் வட்டி விகிதம் மாற்றமில்லாமல் தொடர்வதால், ஆகஸ்ட் மாதத்திலும் தங்கத்தின் விலை சரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதிகளவில் சரிவு இல்லை என்றாலும், பெரிய அளவில் ஏற்றமும் இருக்காது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை சரிவு ஒருபுறம் இருக்க, வெள்ளியின் விலையில் ஏற்பட்ட சரிவு முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்ததை அடுத்து, பலரும் வெள்ளியில் முதலீடு செய்தனர். ஆனால் கணிப்புக்கு நேர்மாறாக விலை சரிந்ததால், வெள்ளி முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 3) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 4) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,05,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.230-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,30,000-க்கு விற்பனையாகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை சரிவதற்கான வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளதால், தங்கம் வாங்க இந்த மாதம் ஏற்றதாக இருக்கும். இருப்பினும் தினசரி விலை மாற்றத்தைக் கவனித்து வந்தால், விலை சரியும் போது உடனே வாங்க ஏதுவாக இருக்கும்.

அதோடு விலை சரியும் போது தான் முதலீட்டிற்கான நேரமும் உருவெடுக்கும். அவ்வகையில் தற்போதைய காலம் முதலீட்டிற்கு ஏற்ற காலமாக கூறப்படுகிறது

gold investment
gold
இதையும் படியுங்கள்:
'ஆட்டோ ஸ்வீப்' : இப்படி கூட பணத்தை முதலீடு பண்ணலாம்!
தங்கம் விலை

கடந்த மாதம் 2026 ஜூலை 4-ல் தங்கத்தின் விலை:

1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

கடந்த மாதம் 2026 ஜூலை 4-ல் வெள்ளியின் விலை:

1 கிராம் - ரூ.260

கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 4-ல் தங்கத்தின் விலை:

1 கிராம் - ரூ.9,295 1 சவரன் ரூ.74,360

கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 4-ல் வெள்ளியின் விலை:

1 கிராம் - ரூ.123

மேற்கண்ட விலை விவரங்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு மாதத்திற்கு முன்பிருந்த விலைக்கும், தற்போதைய விலைக்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பதே உண்மை.

ஆனால் ஓராண்டிற்கு முந்தைய விலை நிலவரங்களை ஒப்பிட்டால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை முதலீடு - வாரன் பஃபெட் கூறும் ஆலோசனைகள்...
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com