தவெக-வின் 'வேளாண் பட்ஜெட்' ரகசியம்.! குட் நியூஸ் சொன்ன அமைச்சர்.!

Agriculture Budget
Agriculture
Updated on

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு, நேற்று (ஜூன் 5) தான் முதல் அமைச்சவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல், மதுக் கடைகளை மூடுதல், மேட்டூர் அணைத் திறப்பு, மகளிர் உரிமைத் தொகை மற்றும் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பாண்டிலும் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த கடந்த ஆட்சியில் தான் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் அறிமுகமானது. அதற்கு முன்பு வரை வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டதில்லை. பொது பட்ஜெட்டிலேயே வேளாண் துறைக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வேளாண் பட்ஜெட், விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியிலும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

வருகின்ற ஜூன் 12-ம் தேதி பாரம்பரிய வழக்கப்படி மேட்டூர் அணைத் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இன்று (ஜூன் 6) கும்பகோணத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்தார் வேளாண் துறை அமைச்சர் வினோத். அதற்குப் பிறகு அமைச்சர் பேசுகையில், “கடந்த ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட்டில் வரப்போகும் பல அறிவிப்புகள் விவசாயிகளின் முன்னேற்றத்தை உயர்த்தும் வகையில் இருக்கும். காவிரி டெல்டா பாசனத்திற்காக வெகு விரைவில் மேட்டூர் அணையும் திறக்கப்படும்” என அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதேபோல் நடப்பாண்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : இனி எந்த வைரஸ் வந்தாலும் பயமில்லை.! வந்தாச்சு AI தடுப்பூசி.!
Agriculture Budget

சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் அதிகபட்சம் ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.2,000 கோடிக்கும் மேல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் முழுக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதற்கு ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து வருகிறோம். வெகு விரைவில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவரும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேளாண் படஜெட்டில் கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் எதிர்பாக்கின்றனர். திராவிட கட்சிகளை கீழிறக்கி, ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்: பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய இனி 55 நிமிடங்கள் போதும்.!
Agriculture Budget
logo
Kalki Online
kalkionline.com