.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) கட்சி பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சோக சம்பவம் நினைவிலிருந்து இன்னும் மறையவில்லை.
கடந்த 27 செப்டம்பர் 2025 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. கட்சி தலைவர் விஜய் தலைமையில் ஒரு பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் மிக அதிக அளவில் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் சிக்கி சிதறிய போது மூச்சுத்திணறல், மிதித்தல் மற்றும் உயிர் தப்பிக்க அருகிருந்த கம்பங்கள் ஏறி தொங்கியதில் கீழே விழுந்து என காரணங்களால் 41 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சரியான திட்டமிடல், திட்டம்சார் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததாக காவல்துறை கூறிய நிலையில் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு மற்றும் தவெக சார்பில் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் (Vijayamangalam / Sungkachavadi அருகே)நாளை (டிசம்பர்) 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் பரப்புரை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் கரூர் நிகழ்வுக்குப் பிறகு கட்சியின் இயக்கம் குறித்த விழிப்புணர்வை மீண்டும் துவக்கும் வகையில் நடைபெறும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவதால் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்ற மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தலைமையில் இதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உருவாகி வருகிறது.
இது குறித்து "தொண்டர்கள் பெரிய கம்பத்தில் ஏறாத வகையில் கம்பத்தை சுற்றி முள் கம்பிகளால் சுற்றி விடப்பட்டு வேலிகள் அமைக்கப்படும் என்றும் பாதுகாப்பு படையினர் மற்றும் தொண்டர் படையினர் கூடுதல் பாதுகாப்புடன் கூட்டத்தை வழி நடத்துவார்கள். கூட்டத்தில் கலந்து கொள்ள டோக்கன் பாஸ்கள் வழங்கப் போவதில்லை " என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் 35,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசல் தவிர்க்க வெளியூர் கட்சித் தொண்டர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. 40 கேமராக்கள், 24 ஆம்புலன்ஸ்கள், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் , கேன்கள் , பாட்டில்களில் தண்ணீர் வசதி என பல்வேறு வழிகளில் தொண்டர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யப்படுவதாக அக்கட்சியின் அறிவிப்புகள் கூறுகிறது.