#BREAKING : மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள்: அமைச்சர் வினோத்..!!

மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட்
வேளாண் பட்ஜெட்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

தமிழ்நாட்டில் கிராமப்புற மகளிர் மற்றும் பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மைத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த 50 சதவீத மானிய விலையில் டிரோன்கள் வழங்கும் ‘வெற்றி வான் மகள்’ என்னும் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

நேற்று முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் தமிழக சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய தொடங்கினார். தொடர்ந்து அவர் வேளாண் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

தமிழ்நாட்டில் கிராமப்புற மகளிர் மற்றும் பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மைத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த 50 சதவீத மானிய விலையில் டிரோன்கள் வழங்கும் ‘வெற்றி வான் மகள்’ என்னும் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

நவீன விவசாய முறைகளை ஊக்கப்படுத்தவும், கிராமப்புற மகளிருக்கு புதிய தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வேளாண் பணிகளான பூச்சிக்கொல்லி தெளித்தல், உரமிடுதல் மற்றும் பயிர் கண்காணிப்பு போன்ற பணிகளில் பெண்கள் நேரடியாக ஈடுபட்டு கூடுதல் வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெற்றி வான் மகள் திட்டத்தின் மூலம் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியில் வான்மகள் திட்டம் தொடங்கப்படும்..

அமைச்சர் வினோத்|வேளாண் பட்ஜெட்
அமைச்சர் வினோத்|வேளாண் பட்ஜெட்image credit-maalaimalar.com

பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.50 கோடியில் ட்ரோன்கள் வழங்கப்படும். ரூ.4 கோடியில் ட்ரோன் இயக்க பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண் விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு டிரோன்களைக் கொள்முதல் செய்ய 50 சதவீத நிதியுதவி மானியமாக வழங்கப்படவுள்ளது. டிரோன்களைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் இயக்குவதற்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள், சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் (DGCA) அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்கள் வாயிலாக இலவசமாக அளிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்: விவசாயிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?
வேளாண் பட்ஜெட்

பயிற்சி முடிக்கும் பெண்களுக்கு டிரோன் இயக்கும் உரிமமும் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் சொந்தமாக டிரோன் சேவை மையங்களைத் தொடங்கி, பிற விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் சேவை வழங்கி பொருளாதார ரீதியாகக் காலூன்ற முடியும்.

வழக்கமான முறையைக் காட்டிலும் டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் போது 70 சதவீதத்திற்கும் அதிகமான தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, குறுகிய நேரத்தில் அதிக பரப்பளவில் துல்லியமாக தெளிக்க முடியும். பெண்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்வதோடு, தமிழக விவசாயத் துறையை நவீனமயமாக்குவதில் ‘வெற்றி வான் மகள்’ திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு

ரூ.10 கோடியில் வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம்- அமைச்சர் வினோத்

மாடித்தோட்டம் அமைக்க இடுபொருட்கள், விதைகள், நிழல்வலை குடில்கள் வழங்கப்படும்.

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : வேளாண் விளைப்பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு- அமைச்சர் வினோத்..!
வேளாண் பட்ஜெட்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு.

logo
Kalki Online
kalkionline.com