

கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சென்னை, பெங்களூர், அகமதாபாத், சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு நாள்தோறும் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர்விஸ்டா போன்ற விமான நிறுவனங்களின் சேவை மூலம் 28 முதல் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் விமான பயணம் முன்னிட்டு இங்கு வருகை தரும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சிற்றுண்டி வழங்கும் 'Udan Yatri Cafe' உள்ளிட்ட புதிய வசதிகளை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் காணொளி வாயிலாக இந்தப் புதிய வசதிகளைத் திறந்து வைத்தனர். கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்துடன் மும்பை, சூரத், மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 5 விமான நிலையங்களில் உதான் யாத்ரி கஃபே UDAN Yatri Cafes திறக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது இவைகளுடன் 13 உதான் யாத்ரி கஃபேக்கள் உள்ளன.
உடான் யாத்ரி கஃபே – சிறப்பம்சங்கள்:
இந்திய அரசு மற்றும் விமான போக்குவரத்து துறையின் புதிய பயணியருக்கான வசதி ஆன “Udan Yatri Cafe” எனப்படும் உணவகம் அல்லது கேபே பெரும்பாலும் விமான நிலையங்களில் செயல்படும். பொதுவாக விமான நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்த உணவுக் கட்டணங்களுக்கு மாற்றாக குறைந்த செலவில் பயணிக்கவருபவர்களுக்கு சுத்தமான, சிற்றுண்டி மற்றும் பானங்களை மலிவு விலையில் வழங்குவது இதன் நோக்கமாகும்.
விலைப்பட்டியல்:
தேநீர்: ₹10 | காபி: ₹20
சிற்றுண்டி (சமோசா, வடை): ₹20
குடிநீர் பாட்டில்: ₹10 | இனிப்பு: ₹20
தேநீர் ₹10, காபி ₹20, சாப்பாடு & ஸ்நாக்ஸ் (சமோசா, வடை போன்றவை) ₹20,
தண்ணீர் பாட்டில் – ₹10, இனிப்பு – ₹20 என இதன் மூலம் ஒரு பயணி ₹100-க்குள் முழு உணவையும் சாப்பிட முடியும் என்பது இதன் சிறப்பு. இதன் மூலம் விமான பயணிகளுக்கான உணவு செலவை குறைத்து விமான நிலையங்களில் மக்கள் கூறும் அதீத உணவுக் கட்டண பிரச்சனையை தீர்க்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அகில இந்திய அளவில் கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், புனே, விஜயவாடா உள்ளிட்ட பல விமான நிலையங்களில் இந்த (Udan Yatri Cafe) மலிவு விலை உணவகம் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் ஒரு நாள் சராசரியாக ₹24,000 வருமானம் பதிவு செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளதாக குறிப்புகள் உள்ளன. இந்த உணவகங்கள் சிறப்பு திறனுடைய நபர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகிறது என்று கூறப்படுகிறது. சிலர் உணவு தரம் குறித்து கேள்விகள் எழுப்பினாலும் இது பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருப்பதால் வரவேற்பு பெறுகிறது.
மேலும் அந்தந்தப் பகுதிகளில் ஜி.ஐ. டேக் (Geographical Indication) பெற்ற சிறப்புப் பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனை செய்ய ஒரு விற்பனை நிலையமும் துவங்கப்பட்டது. (உதாரணமாக கோவையின் பெருமைக்குரிய ஜி.ஐ. டேக் பெற்ற கோவை கோரா காட்டன் விற்பனை நிலையம் ). காத்திருக்கும் நேரத்தில் விளையாடும் வகையில் குழந்தைகளுக்காக ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியும், பயணிகளின் ஓய்வு நேரத்தில் வாசிக்க நூலக வசதியும் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை மத்திய அமைச்சர்கள் காணொளி மூலமாக துவக்கி வைத்தனர்.
இந்த புதிய வசதிகள் தமிழகத்தின் மேற்குப் பகுதியின் முக்கிய விமான நிலையமான கோவை விமான நிலையத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றும், பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்கும் என்றும் மேலும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் கூடுதல் வசதிகளை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் இயக்குனர் முகமது ஆரிஃப் தெரிவித்துள்ளார்.
இந்த வசதிகள் மேலும் பல பெரிய இந்திய விமான நிலையங்களுக்கு விரிவடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் விமான பயணங்கள் அனைவருக்கும் ஏற்றதாக சாதாரணமானவர்களுக்கும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.