உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தனது அடுத்த அதிரடி திட்டத்தைக் குறித்து அறிவித்திருக்கிறார். இதுகுறித்தான விரிவான செய்தியை பார்ப்போம்.
உலகின் இரண்டாவது பணக்காரர் எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று பெயரிட்டார். மேலும் அமெரிக்காவில் சில நாட்கள் முன்னர் தேர்தல் நடைபெற்றதில் வெற்றிபெற்ற ட்ரம்பிற்கு பேராதரவாக இருந்தார். இப்படியான நிலையில் சமீபத்தில் டெல்லியிலிருந்து அமெரிக்காவிற்கு 40 நிமிடங்களில் செல்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும், அதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறினார்.
அந்தவகையில் தற்போது நியூ யார்க்கிலிருந்து லண்டனுக்கு செல்ல வெறும் 1 மணி நேரமே போதும் என்று எலான் மஸ்க் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தன்னுடைய The boring company நிறுவனம் வாயிலாக கடலுக்கு அடியில் இருபது பில்லியன் டாலர் செலவில் சுரங்கப் பாதை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
அட்லாண்டிக் கடலுக்கடியில் 4,800 கிலோ மீட்டர் நீளத்தில் சுரங்கப் பாதை அமைத்து, அதில் அதிவிரைவு ரயில்களை இயக்கி, அமெரிக்கா பிரிட்டன் இடையிலான பயண நேரத்தை குறைக்கத் திட்டமிட்டு வருகிறார்.
வழக்கமாக விமானத்தில் அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் செல்ல 8 மணி நேரமாகும். இந்த பயண நேரத்தைக் குறைப்பது பலருக்கும் வசதியாக இருக்கும். ஆனால், இது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இதுபோல் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பதை வெகுநாட்களாக யோசித்து வருகிறார் எலான் மஸ்க். ஆனால், அதற்கு மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படும் என்பதால், இந்தத் திட்டத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்.
இப்போது அவருடைய The Boring company –ல் இதற்கான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் வந்துவிட்டதால், இந்த கனவை நினைவாக்க திட்டம்போட்டு வருகிறார்.
கடலுக்கடியில் சுரங்கம் அமைப்பது மிக மிக சவாலான ஒரு விஷயமாகும். அந்த சுரங்கப்பாதையை அமைப்பதற்கு மட்டுமல்ல, அங்கிருக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பணியை முடிப்பிது மிகவும் சவால்தான். அதற்கேற்றவாரு திட்டங்களை வகுத்தால் மட்டுமே எலான் மஸ்க்கால் இதனை சரியாக செய்து முடிக்க முடியும்.
ஒருவேளை இந்த முயற்சி வெற்றியில் முடிந்தால், மனித இனத்தின் மாபெரும் சாதனையாகவே இது விளங்கும்.