குட் நியூஸ்..! ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு..!

ஜல் ஜீவன் திட்டம்
ஜல் ஜீவன் திட்டம்
Published on

ஜல்ஜீவன் திட்டம் (JJM) என்பது 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த குடிநீர் தொடர்பான திட்டம். குறிப்பாக 2024 லிருந்து 2028-க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் தனிக் குழாய் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் (FHTC) வழங்கும் அரசின் முக்கிய திட்டமாகும். இது தண்ணீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றும் சமூகப் பங்கேற்பை வலியுறுத்துகிறது.

கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் குடிதண்ணீர் தேவைக்காக நெடுந்தூரம் செல்வதை தடுத்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும், தண்ணீர் தொடர்பான நோய்களைக் குறைப்பதையும் இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற வீடுகள் அனைத்திற்கும் குழாய் (Tap) மூலம் குடிநீர் வழங்குவதுடன்

ஒவ்வொரு வீட்டிற்கும் தினமும் 55 லிட்டர் (LPCD) தண்ணீர் வழங்குவது இத்திட்டத்தின் இலக்காக உள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் Functional Household Tap Connection (FHTC) ,மழைநீர் சேகரிப்பு,நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள், நீர் தர பரிசோதனை, கிராம மக்களின் பங்குபெறும் நிர்வாகம் (VWSC / Pani Samiti) ஆகியவை இதன் சிறப்பம்சம் ஆகும்.

கிராமப்புற குடும்பங்கள் மட்டுமின்றி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் , சுகாதார மையங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் இவை அனைத்துக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

கிராமப்புற வீட்டுக்கு குடிநீர் வழங்கும் இந்த ஜல்ஜீவன் திட்டத்தை வரும் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கவும், திட்டத்திற்கான மொத்த நிதியை ரூ.8.7 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது கிராம மக்கள் இடையே மகிழ்ச்சி அளித்துள்ளது எனலாம்.

ஜல் ஜீவன் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு சராசரி செலவு எவ்வளவு தெரியுமா?

வீட்டுக்குள் குழாய் இணைப்புக்கு ₹3,000லிருந்து ₹8,000 வரையும் ,திட்ட செலவுடன் (பம்ப், ஓவர்ஹெட் டேங்க், पाइப்லைன் உட்பட)₹15,000 லிருந்து ₹25,000 வரையும் செலவு ஆகிறது என்கின்றனர்.

இந்த செலவுக்கான தொகை மத்திய அரசு ,மாநில அரசுடன் உள்ளூர் அமைப்புகளும் சேர்ந்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் ொடங்கும்போது 17% வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இருந்ததாகவும் தற்போது 1.25 கோடி கிராம வீடுகளில் சுமார் 86–89% வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுவது குறிப்பி.த்தக்கது.

வீட்டிலேயே குடிநீர் ,சுகாதாரம் மேம்பாடு, , நீர் சேமிப்பு ,விழிப்புணர்வு ,நேர சேமிப்பு போன்ற எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் ஜல் ஜீவன் திட்டத்தின் பெரிய சிக்கல்களாக தண்ணீர் மூலாதாரம் குறைவு, நீர் தர பிரச்சினை, திட்ட வேலை தாமதம், பராமரிப்பு குறைவு , செலவு அதிகரிப்பு ஆகியவைகள் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனாலும் நீர்த் தேவை பூர்த்தியாகி கிராமங்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாகும் இத்திட்டத்தில் மத்திய அரசு தந்துள்ள இந்த சலுகை முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசு மழை!
ஜல் ஜீவன் திட்டம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com