அரியர் பேப்பர்களை முடிக்க மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி!
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி!
Updated on

சென்னை பல்கலைக்கழகம் தனது தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் பல்வேறு இளநிலை,முதுநிலை மற்றும் பல சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகிறது.இந்நிலையில் இதன் மூலம் பயிலும் மாணவர்கள், தங்களின் பழைய அரியர் பாடங்களை எழுதித் தேர்ச்சி பெறுவதற்கான சிறப்பான அறிவிப்பு ஒன்றை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதுத் தொடர்பாக சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் செய்திக் குறிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் பழைய மாணவர்கள் தங்களது இளங்கலை படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (கல்வி ஆண்டு 2018 முதல் கல்வி ஆண்டு 21 வரை படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள்) தாங்கள் தேர்ச்சி பெறத் தவறிய பாடங்களின் தேர்வுகளை தற்போது எழுதி தேர்ச்சி பெறலாம்.இது அவர்களுக்கு வழங்கப்ப்டும் இறுதி வாய்ப்பாகும். இதற்காக இரண்டு கூடுதல் அமர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சலுகையின் கீழ், மாணவர்கள் 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜூன் மாதங்களில் நடைபெறும் தேர்வு அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, 2025 டிசம்பர் பருவத்திற்காக தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளன. இளங்கலை, முதுகலை மட்டுமின்றி டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் இந்தத் தேர்வுகளை எழுதத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் மே மாதத்தில் இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம். மேலும் இது சார்ந்து அவர்களுக்கு தேவையான விவரங்களை மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ideunom.ac.in இல் அறிந்துக் கொள்ளலாம்.மேலும் இந்த இணையதளத்தின் வழியாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அரியர் பாடங்களை முடிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள இந்த இறுதிக் கட்ட வாய்ப்பினை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கடந்தக் கால சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு படிப்புகளில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! இனி வாட்ஸ்அப்பிலும் ரீசார்ஜ் செய்யலாம்.!
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com