"இது உடம்புக்கு ஆகாது சார்!" - தன் கடை இனிப்பையே சாப்பிட மறுத்த உரிமையாளர் !அதிரவைக்கும் வீடியோ!

"இது உடலுக்கு கேடு, நான் சாப்பிட மாட்டேன்!": தன் கடை இனிப்பையே உண்ண மறுத்த உரிமையாளர் - வைரல் வீடியோவும் வெள்ளித் தாள் ஆபத்தும்!
இனிப்பில் வெள்ளித் தாள் கலப்படம்
இனிப்பில் வெள்ளித் தாள் கலப்படம்source:twitter
Updated on

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூரில் உள்ள இனிப்புக் கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, இனிப்பில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அப்போது சோதனையில் ஈடுபட்ட அதிகாரியொருவர் அந்த இனிப்பை அந்தக் கடை ஊரிமையாளரை உண்ணுமாறு கூறியபோது, அது உடலுக்குக் கேடானது எனக் கூறி அக்கடை உரிமையாளர் உண்ண மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் அந்த இனிப்பு கலப்படமானது என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம், மௌதஹா பகுதியில் திருவிழா காலத்தை முன்னிட்டு, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இனிப்புக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த இனிப்புகள் விற்பனை செய்யும் கடையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளித்தாள் பூசப்பட்ட இனிப்பு ஒன்றை கடை உரிமையாளர் அன்னி பாபாவிடம் அதிகாரிகள் சாப்பிட்டுக் காட்டுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அவர் தனது கடையில் விற்பனை செய்யப்பட்ட அந்த இனிப்பை சாப்பிட மறுத்தார். அதிகாரிகள் பலமுறை கேட்டும் அவர் சாப்பிடவில்லை. இந்தக் காட்சி வீடியோவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.அதிகாரிகளுக்கு அந்த இனிப்பில் பயன்படுத்தப்பட்டிருந்த சில்வர் தாள் மற்றும் அதன் தரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சில கடைகளில் சுகாதாரமற்ற சூழலும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பல்வேறு இனிப்புகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.விதிமீறல் அல்லது கலப்படம் இருப்பது ஆய்வக அறிக்கையில் உறுதியானால், சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அறிக்கைகளின்படி, சந்தேகத்திற்குரிய இனிப்புகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பொதுவாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வரும் போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய கடை உரிமையாளரிடம் அவர் தயாரிப்புகளை சாப்பிட்டு பார்க்க சொல்வது வழக்கம் தான். கடைக்காரர் அவர்கள் கேட்டும் மறுத்ததால் கலப்படம் மீதான சந்தேகம் மேலும் வலுக்கிறது.

இங்கு சந்தேகம் வந்திருப்பது பொதுவாக இனிப்புகளின் மேல் அலங்காரமாக ஒட்டப்படும் வெள்ளி நிற மெல்லிய தாள் — “Silver Leaf / Vark (வெர்க்)” பற்றிதான். இனிப்பில் இருக்கும் சில்வர் தாள் என்பது இது உண்மையான மிகவும் மெல்லிய வெள்ளித் தாள். பர்பி, காஜு கட்லி, சோன் பப்டி போன்ற இனிப்புகளின் மேல் அழகுக்காக ஒட்டப்படுகிறது.

பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தப்படும் தூய வெள்ளி (edible silver) கொண்டு தயாரிக்கப்படுகிறது என்றும் இது சுவைக்காக அல்ல வெறும் அலங்காரத்திற்காக மட்டுமே என்றும் கூறப்படுகிறது இவை மிகவும் மெல்லியதாக இருப்பதால், இனிப்பின் மேல் வெள்ளி நிறப் படலமாகத் தெரியும் போது அந்த இனிப்பு மேலும் நம்மைக் கவரும்.

silver foil
silver foilslource:slurrp.in

ஆனால் எல்லா “சில்வர் தாளும்” பாதுகாப்பானதா என்றால் இல்லை என்றே பதில் வரும். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் அது உண்மையான food-grade edible silver தாளா என்பதுதான்.சில நேரங்களில் போலியான அல்லது தரமற்ற பொருட்கள் வெள்ளித் தாள் போல பயன்படுத்தப்படலாம். குறிப்பாக அலுமினியம் போன்ற மலிவான உலோகங்களை வெள்ளித் தாளாக பயன்படுத்துவது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நல்ல தரமான வெள்ளித் தாளை நாமே அடையாளம் காணலாம். கடையில் வாங்கும்போது Food-grade / edible silver என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்றும்

தயாரிப்பில் FSSAI உரிமம்/லேபிள் உள்ளதா என்பதையும் அவசியம் பார்க்க வேண்டும். குறிப்பாக நம்பகமான கடையிலிருந்து வாங்குகிறீர்களா என்பது முக்கியம்.

தாள் மிகவும் தடிமனாகவோ, இயற்கைக்கு மாறாக பளபளப்பாகவோ இருந்தால் அந்த இனிப்பை தவிர்ப்பது நல்லது. அதேபோல் தாள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ள இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது.

உண்மையான உண்ணக்கூடிய வெள்ளி (edible silver) மிகச் சிறிய அளவில் பயன்படுத்தப்படுவதால், பொதுவாக அது உடலில் குறிப்பிடத்தக்க அளவு உறிஞ்சப்படுவதில்லை. ஆனால் கலப்படமான உலோகத் தாள்தான் முக்கியமான ஆபத்து என்கின்றனர்.

எப்படியோ வீடியோ வைரலாகி செய்தி பரவலான தால் வெள்ளித் தாள் பற்றிய விழிப்புணர்வு பெருகியுள்ளது வரவேற்கத்தக்கது.

இதையும் படியுங்கள்:
Interview: செய்தித்தாளில் உணவு உண்பது ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவரின் விளக்கம்!
இனிப்பில் வெள்ளித் தாள் கலப்படம்
logo
Kalki Online
kalkionline.com