எவரெஸ்ட் சிகரத்தில் ஒரு இந்தியப் பெண்ணின் சாதனை..! - வியப்பில் உலகம்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த திவ்யா சிங், எவரெஸ்ட் அடிப்படை முகாமை (Everest Base Camp) மிதிவண்டியில் சென்றடைந்து ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார்
divya singh
divya singhimage credit-economictimes.indiatimes.com
Published on

அடுப்பங்கரையில் முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று உலகில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் சமையலறைக்கு மட்டுமே சொந்தமானவர்கள் அல்ல; அவர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்பதே தற்போதைய நிலை.

அப்படித்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் நகரத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் ஆசிரியை திவ்யா சிங் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

திவ்யா சிங், உலகின் உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரம் அடிவார முகாமான எவரெஸ்ட் அடிவார முகாம் (Everest Base Camp(EBC) வரை மிதிவண்டியில் சென்று அடைந்த முதல் இந்தியப் பெண் எந்த சாதனையையும் மற்றும் உலகளவில் இரண்டாவது பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.

இவர் நேபாளத்தின் காத்மாண்டு நகரத்தில் இருந்து தனது சவாலான பயணத்தைத் தொடங்கி உள்ளார்.

14 நாட்கள் தொடர்ந்து கடுமையான இயற்கை சவால்களை எதிர்கொண்டு, 17,560 அடி உயரத்தில் அமைந்துள்ள அடிவார முகாமை வெற்றிகரமாக அடைந்தார்.

இதையும் படியுங்கள்:
கொள்ளைக்காரர்களுடன் போராட்டம்! கால் மேல் ரயில் ஏறி துண்டிக்கப்பட்ட பயங்கரம்! காலை இழந்த மங்கை எறியதோ எவரெஸ்ட் சிகரம்!
divya singh

இந்த 14 நாட்கள் பயணத்தின் போது திவ்யா சிங் -12°C வரை உறைபனி வீசும் காற்று மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு, பலத்த காற்றழுத்தம் உள்ளிட்ட கடும் சூழல்களை எதிர்கொண்ட அவர், பயணம் முழுவதும் மிகுந்த மன உறுதியுடன், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளையும் தைரியமாக சமாளித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த பயணத்தின் போது இவர் சைக்கிளில் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை, செங்குத்தான ஏற்றங்கள், கற்களும் களிமண்ணும் நிறைந்த சமமற்ற மலைப்பாதைகள், சறுக்கலான வழிகள் போன்ற கடினமான நிலப்பரப்புகளைக் கடந்து சென்றுள்ளார். மேலும் நிலப்பரப்பு சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்றதாக இல்லாத பல இடங்களில், அவர் தனது சைக்கிளை தோளில் சுமந்துகொண்டே முன்னோக்கிச் சென்றுள்ளார்.

உடல் நிறுத்தச் சொன்னாலும், நீங்கள் நிறுத்தாதபோது உயரமான மலைப்பகுதிகளில், சுவாசிப்பது கூட ஒரு பெரிய வேலையாகத் தோன்றலாம். சோர்வு, குளிர் காற்று, மற்றும் உயர நோய் ஏற்படும் தொடர்ச்சியான அபாயம் ஆகியவையும் சேரும்போது, பெரும்பாலான மக்கள் இலக்கை பாதியிலேயே கைவிட்டு விடுவர்.

ஆனால் திவ்யா அப்படி இல்லை. தன் இலக்கை அடைவதில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு கிலோமீட்டராக, ஒவ்வொரு சிறு அசௌகரியத்தையும் தாண்டி அவர் முன்னேறிச் சென்றார்.

இறுதியில் எவரெஸ்ட் அடிவார முகாமில் தன் மிதிவண்டியுடன், இந்தியக் கொடியைப் பிடித்தபடி நிற்கும் அந்தக் காட்சி, மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்றாகும். மலைகளின் அழகின் பின்னணியில் திவ்யா சிங் தனது மிதிவண்டியுடன் நின்று இந்திய தேசியக் கொடியை உயர்த்தியபடி இருக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
எவரெஸ்ட் சிகரத்தில் வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கிக் கொண்ட 200 பேர், ஒருவர் பலி..!
divya singh

திவ்யா சிங் எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தது மட்டுமல்ல. போதுமான மனவுறுதி இருந்தால், அடைய முடியாத இலக்குகள்கூட எட்ட முடியாதவை அல்ல என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com