ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் இந்தியர்கள் இனி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இது இந்திய சுற்றுலா வாசிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
இந்திய மக்களுக்கு பணம் செலுத்துவதில் மிகவும் வசதியான ஒன்று என்றால், அது போன் மூலம் செலுத்துவதுதான். இதனால், கையில் பணம் இல்லையென்றாலும், போன் மூலமாக பணம் செலுத்திவிட்டு வருகின்றனர். மக்களின் வசதிக்காக பல பேமென்ட் மெதட்கள் வந்தன. இந்தியாவில் போன் பே, கூகுள் பே, பீம் போன்ற யுபிஐ டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவை விட்டு வெளியே போனால், போன் பே முறை கஷ்டம்தான். குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இதுபோன்ற பணம் பரிமாற்றம் செய்யும் முறைகள் இல்லை. இதனால் மக்கள் கையில் பணம் வைத்துக்கொண்டு செலவு செய்தே வருகின்றனர்.
ஆனால், தற்போது ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளிலும் இந்தியர்கள் யுபிஐ பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக, டியூட்டி ஃப்ரீ கடைகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாகவும், படிப்படியாக சில்லறை கடைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், பூடான், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுகிறது. இந்த லிஸ்ட்டில் தற்போது யுஏஇ இணைந்துள்ளது இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் இந்த ஜிபே, போன் பே மூலமாக மக்கள் தங்கள் பணத்தை இழந்தாலும், மறுபக்கம் இந்த போன் பேமென்ட் பெரியளவில் வசதியாக இருக்கிறது. இந்தியாவிற்குள் மட்டும் மக்கள் இந்த வசதிகளை பெற்று வருகின்றனர். இதனையடுத்து இந்த சேவை இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் போல் படிபடியாக மற்ற நாடுகளிலும் கொண்டு வந்தால், உலகம் முழுவதும் மக்கள் எளிதாக சுற்றலாம். எந்த பயமும் இன்றி சுற்றலாம். விரைவில் இந்த போன் பே முறைகள் எந்த எல்லையும் இன்றி அனைத்து இடங்களிலும் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.