ஸ்மார்ட்போன் தேவையில்லை... நெட்வொர்க்கும் தேவையில்லை! RBI-யின் புதிய UPI ட்ரிக்!

ஸ்மார்ட்போன் மூலம், இணையதள வசதி இல்லாமலேயே, 'UPI Tap & Pay' வழியாக பணம் செலுத்தும் புதிய வசதியை RBI அறிமுகப்படுத்தி உள்ளது.
UPI பேமெண்ட்
UPI பேமெண்ட்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இணையதள வசதி மற்றும் யுபிஐ இல்லாமலேயே பணப் பரிமாற்றம் செய்வதற்கான புதிய வசதியை ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களின் மொபைலில் இன்டர்நெட் டேட்டா ஆன் செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அதாவது NFC வசதியுள்ள ஸ்மார்ட்போன் மூலம், இணையதள வசதி இல்லாமலேயே, 'UPI Tap & Pay' வழியாக பணம் செலுத்தும் புதிய வசதியை RBI அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது வரை நாம் ஒரு கடையில் அல்லது வணிக வளாகத்தில் UPI மூலம் பணம் செலுத்த வேண்டுமென்றால் (UPI பேமெண்ட்), ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பேடிஎம் (Paytm) போன்ற ஏதேனும் ஒரு செயலியைத் திறந்து, கியூ-ஆர் குறியீட்டை (QR code) ஸ்கேன் செய்து, PIN எண்ணை உள்ளீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 'டேப் அண்ட் பே' (UPI Tap & Pay) வசதி மூலம், ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும், எந்தவொரு UPI செயலியை திறக்காமலேயும் மிக எளிதாகப் பணம் செலுத்த முடியும்.

அதாவது 'டேப் அண்ட் பே' என்பது கார்டை ஸ்வைப் செய்யாமல் மெஷின் அருகில் கொண்டு செல்வதன் மூலம் பணத்தைச் செலுத்தும் NFC தொழில்நுட்பமாகும். இதற்கு போனில் மொபைல் இணையம் தேவையில்லை, POS இயந்திரத்தின் இணைய இணைப்பு மூலம் பரிவர்த்தனை நடைபெறும்.

இதன் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனைத் திறந்து, NFC வசதியுள்ள கடைகளில் உள்ள போஸ் (POS) இயந்திரத்தின் அருகே தொட்டு வைப்பதன் (Tap) மூலம் சில விநாடிகளில் தங்களின் பணப் பரிவர்த்தனையைச் செய்து முடிக்க முடியும்.

RBI
RBI

NFC தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த வசதியில், ஸ்மார்ட்போனை point of sale என்ற விற்பனை இயந்திரத்தின் அருகே தொட்டு வைப்பதன் மூலம் சில விநாடிகளில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும்.

ரூ.5,000 வரையிலான சிறிய மற்றும் நடுத்தர மதிப்புள்ள கட்டணங்களுக்கு யுபிஐ பின் (UPI PIN) எண்ணை உள்ளிடாமலேயே மிக வேகமாகப் பணம் செலுத்த முடியும். அதற்கு மேல் (ரூ.5,000-க்கு மேல்) பணம் செலுத்தும்போது மட்டுமே பாதுகாப்பு காரணங்களுக்காக போஸ் இயந்திரத்தில் யுபிஐ பின் எண்ணை உள்ளிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலகம் முழுவதும் பிரபலமடையும் இந்தியாவின் யு பி ஐ பரிவர்த்தனை !
UPI பேமெண்ட்

குறிப்பாக 5,000 ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு PIN எண் தேவையில்லை என்பதால் நேரம் மிச்சப்படுவதோடு, சிறு வணிகம் செய்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உபயோகமாக இருக்கும். இதனால் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரமும் மேலும் வலுவடையும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வசதி மொபைலில் உள்ள Near Field Communication (NFC) தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது.

NFC என்பது அருகில் வைத்து தகவல் பரிமாற்றம் செய்யும் இந்த தொழில்நுட்பம், உங்கள் ஸ்மார்ட்போனில் NFC வசதி இருக்கிறதா என்பதை Setting-ல் ‘NFC’ எனத் தேடி தெரிந்து கொள்ளலாம்.

புதிய வசதி NFC உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் அதற்கு இணக்கமான POS இயந்திரம் இருக்கும் இடங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதனுடன் சேர்த்து ரிசர்வ் வங்கி 'MyUPI' என்ற AI அடிப்படையிலான வாடிக்கையாளர் உதவி தளத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏதேனும் மோசடி நடந்தால் உடனடியாகப் பணப் பரிவர்த்தனையை நிறுத்த 'Safety Switch' போன்ற அதிரடி பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை சேவையில் புதுமை!
UPI பேமெண்ட்

நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத மலைப் பகுதிகள், இணையச் சேவை குறைவாக உள்ள கிராமப்புறங்கள் மற்றும் நெரிசலான வணிக வளாகங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள இந்த ஆஃப்லைன் பரிவர்த்தனை முறை (UPI Tap & Pay) வசதி வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com