அமெரிக்க கனவுக்கு புதிய செக்..! H-1B விசா விதிகளில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள அதிரடி மாற்றங்கள்!

அமெரிக்க H-1B விசா விதிகளில் புதிய மாற்றம்! இந்தியர்களின் ஐடி கனவுக்கு பாதிப்பா?
H1B Visa
H1B Visa
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 

அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்பது பல இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் கனவு. அந்த கனவுக்கு முக்கிய வழியாக இருப்பது H-1B விசா. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய குடியேற்ற கட்டுப்பாடுகள், அதிகரிக்கும் கட்டணங்கள் மற்றும் ஊதிய நிர்ணய விதிகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் இந்திய பணியாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த மாற்றங்கள் என்ன, யாரைப் பாதிக்கக்கூடும் என்பதை இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

H-1B விசா என்றால் என்ன?

அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பு திறன்கள் தேவைப்படும் பணிகளில் வெளிநாட்டினரைப் பணியமர்த்த உதவும் தற்காலிக வேலைவாய்ப்பு விசாதான் H-1B. தகவல் தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் பலர் இந்த விசாவைப் பயன்படுத்துகின்றனர்.

1,00,000 டாலர் கட்டண கட்டுப்பாடு!

2025 செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட H-1B பணியாளர் நுழைவு கட்டுப்பாட்டை 2026 செப்டம்பர் 18 அன்று அமெரிக்க அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, அமெரிக்காவுக்கு வெளியே இருந்து குறிப்பிட்ட H-1B பணியாளர்களை அழைத்துவரும் சில மனுக்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டிய நிபந்தனை தொடர்கிறது. தேசிய நலன் உள்ளிட்ட சில விதிவிலக்குகளும் உள்ளன. இது எல்லா H-1B விசாதாரர்களும் தனிப்பட்ட முறையில் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டும் என்பதல்ல.

விசா தேர்விலும் புதிய அணுகுமுறை :

2026 நிதியாண்டுக்கு பிறகு, 2027 நிதியாண்டுக்கான H-1B விசா தேர்வு நடைமுறையில் அதிகத் திறனும் அதிக ஊதியமும் கொண்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான எடையிட்ட தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் ஊதிய நிலை முக்கியத்துவம் பெறுகின்றன.

PERM ஊதிய முறையிலும் மாற்ற முன்மொழிவு!

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நிர்ணயிக்கும் முறையை மாற்ற அமெரிக்கத் தொழிலாளர் துறை 2026 மார்ச் மாதத்தில் முன்மொழிவை வெளியிட்டது. இது H-1B மட்டுமின்றி, நிரந்தர வேலைவாய்ப்பு அடிப்படையிலான PERM முறையையும் உள்ளடக்கியது. இருப்பினும், முன்மொழிவு வெளியானது மட்டுமே அது இறுதி விதியாகிவிட்டது என்று பொருளல்ல.

இந்தியப் பணியாளர்கள் கவனிக்க வேண்டியவை:

இந்த மாற்றங்களால் அமெரிக்காவில் வேலை தேடும் இந்திய இளைஞர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு திட்டங்களை முன்கூட்டியே கவனமாக வகுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது அவர்களின் கல்வித் தகுதி,பணித்திறன், அனுபவம் மற்றும் ஊதிய நிலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.. இதனால் அதிகத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றாலும் அனைவருக்கும் விசா கிடைப்பது உறுதி என்று கூற முடியாது..

மேலும் 1,00,000 டாலர் கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னர் அமெரிக்க நீதிமன்றங்கள் அதன் வசூலுக்கு இடைக்கால தடைகளை விதித்துள்ளன..2026 அக்டோபர் நிலவரப்படி அந்த கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.வழக்குகள் தொடர்ந்து நடைபெறுகின்றன..எனவே இந்த கட்டணம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும் கூற முடியாது..

PERM முறையில் முன்மொழியப்பட்டுள்ள ஊதிய மாற்றங்களும் கவனிக்கத் தக்கவை.. இந்த மாற்றங்கள் இறுதி விதிகளாக அமல்படுத்தப்பட்டால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஊதிய நிர்ணயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.. ஆகவே அமெரிக்காவில் வேலை பெற விரும்புவோர் அதிகாரப் பூர்வ விசா அறிவிப்புகளையும் நிறுவனங்களின் பணியமர்த்தல் விதிகளையும் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் ‌‌..

H1 B விசாவை நம்பி அமெரிக்காவில் வேலை தேடுபவர்கள், விண்ணப்பிக்கும் நிறுவனம், ஊதிய விபரம்,விசா கட்டணப் பொறுப்பு மற்றும் நடைமுறையில் உள்ள விதிகள் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்..அதே போல ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் தங்களுடைய விசா நிலை மற்றும் வேலை மாற்றம் தொடர்பான விதிகளைப் புரிந்து கொள்வதும் முக்கியம்.. அதிகாரப் பூர்வ தகவல்களை தொடர்ந்து கவனிப்பது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.

அமெரிக்க விசா விதிகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியர்களின் வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் பணியமர்த்தல் முடிவுகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் கனவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, சமூக ஊடகச் செய்திகளை மட்டும் நம்பாமல், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்ப்பது அவசியம்.

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் H-1B விசா மற்றும் PERM தொடர்பான முக்கிய மாற்றங்களையும் அவை இந்தியப் பணியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் அறிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டமும் அரசுப் பணி நீட்டிப்புச் சிக்கலும்!
H1B Visa
logo
Kalki Online
kalkionline.com