இந்தியா போட்ட மாஸ்டர் பிளானுக்கு பின்னடைவு : சீனாவுக்கு சாதகமாகிறதா அமெரிக்காவின் தாக்குதல்?

Chabahar port USA attack
Chabahar port USA attackimage credit-indiatoday.in
Updated on

ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 3 கப்​பல்​கள் மீது ஈரான் திடீரென தாக்​குதல் நடத்​தி​ய​தை தொடர்ந்து ‘ஈரானுட​னான போர் நிறுத்த ஒப்​பந்​தம் முறிந்​து​விட்​டது. ஈரானுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வது வீணானது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்​தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த அமைதி ஒப்​பந்​தத்​தில் இரு தரப்பு போர் நிறுத்​தம், கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்​துக்கு ஹார்​முஸ் ஜலசந்தி திறப்​பு, ஈரான் மீதான தடைகள் நீக்​கம் உட்பட 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றிருந்தன.

இதையடுத்​து, ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறந்து விடப்​பட்​டது. எனினும், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்​தப்​படும் என்று ஈரான் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்​தது.

இந்​நிலை​யில், ஈரான் எச்சரிக்கையை மீறி 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த நிலையில் அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் திடீரென தாக்​குதல் நடத்​தினர்.

அதற்கு பதிலடி​யாக ஈரானின் 80 இடங்​களில் அமெரிக்கா ஜூலை 7-ம்தேதி குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​ய நிலையில் அந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான்மீது மீண்டும் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு நடந்து வரும் வேளையில், இந்த மோதல் வெடித்து மீண்டும் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளது.

இதனிடையே ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்​வ​தேச சந்​தை​யில் பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை ஒரே நாளில் சுமார் 5 சதவீதம் உயர்ந்​து, ஒரு பேரல் 78.09 டால​ராக அதி​கரித்​தது. அதுமட்டுமின்றி இந்த இருநாடுகளுக்கிடையே மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தால் இந்​தியச் சந்​தைகள் மட்​டுமல்​லாது, உலகெங்​கிலும் உள்ள பங்​குச் ​சந்​தைகள் சரிவைச் சந்​தித்​தன.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பல இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம் இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல்களில் ஈரானின் சபஹார் (Chabahar)துறைமுகம் குறிவைக்கப்பட்டுள்ளது. சபஹார் மீதான தாக்குதல் என்பது இந்தியாவை நேரடியாகப் பாதிக்கக்கூடியது. ஏனென்றால் இந்த சபஹார் துறைமுகத்தில் பல ஆயிரம் கோடியை இந்தியா முதலீடு செய்திருந்தது.

Chabahar port
Chabahar port AI Image

இப்போது இந்தியா அந்த துறைமுகத்தில் நேரடியாக முதலீடு செய்வதில்லை என்றாலும், இந்த தாக்குதல் இந்தியாவின் எதிர்கால திட்டங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, பாகிஸ்தானைத் தவிர்த்து, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பாதையை இது நேரடியாகப் பாதிக்கிறது. இதை விட முக்கியமாக இந்தியா - ஈரான் - ரஷ்யா நாடுகளை இணைக்கும் சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தின் முக்கிய மையமாகவும் சபஹார் துறைமுகம் கருதப்பட்டது. இது இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.

மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய இந்தியா சபஹார் துறைமுகத்தை பெரிதும் நம்பியுள்ளது. மேலும் தெற்காசியா மற்றும் யூரேசியா இடையே சரக்கு போக்குவரத்திற்கான செலவைக் குறைக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் இந்த வழித்தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
டிரம்பின் ஒற்றை அறிவிப்பு: கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு... இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!
Chabahar port USA attack

இத்துறைமுகத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம், சரக்கு முனையங்கள் மற்றும் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், இந்தியா மேற்கொண்ட முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. சபஹார் திட்டம் என்பது பிராந்தியத்தில் சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்திற்கு மாற்றாக இந்தியா உருவாக்கிய ஒரு மூலோபாயத் திட்டமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்த நிலையில், இந்தியா தனது 120 மில்லியன் டாலர் முதலீட்டை பாதுகாக்கும் வகையில் சபஹார் துறைமுகத்தில் தனது பங்குகளை தற்காலிகமாக உள்ளூர் ஈரான் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகின.

எதிர்காலத்தில் நிலைமை சீரடையும் போது மீண்டும் இதில் நுழையலாம் என்ற அடிப்படையில், தற்காலிகமாக மட்டுமே இந்தியா இதனை ஒப்படைத்திருந்தது. தற்போது அமெரிக்கா அந்தத் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், இந்தியா நேரடியாக அதனை நிர்வகிக்காததால் இந்தத் தாக்குதலால் இந்தியாவிற்கு உடனடியாக பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும் இந்தத் தாக்குதல் இந்தியாவின் நீண்ட கால திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் ஜலசந்தி.! இஸ்ரேலுக்கு பாடம் புகட்டும் ஈரான்.! கதிகலங்கும் டிரம்ப்.!
Chabahar port USA attack

தற்போது தான் உலக நாடுகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மீண்டும் ஆரம்பித்துள்ள போர் பதற்றத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் உலக அரங்கில் எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com