குட் நியூஸ்..! இந்தியா மீதான பரஸ்பர வரி 25%-லிருந்து 18% ஆக குறைப்பு..!

india vs us
india vs us
Published on

இந்தியா மீது அமெரிக்கா விதித்திருந்த 50% வரியை நீக்க கோரி, அமெரிக்காவுடன் நடத்தி வந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக இந்தியா மீதான பரஸ்பர வரியை (Reciprocal Tariff) 25% லிருந்து 18% ஆக குறைத்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இந்திய பொருட்கள் மீது 25% கூடுதல் வரியை (extra tariff) 7 பிப்ரவரி 2026 முதல் அமெரிக்கா ரத்து செய்யும் என்று நேற்று ஓர் Executive Order-ல் அறிவிக்கப்பட்டது.

இது ஒரு பரஸ்பர வர்த்தக உடன்படிக்கை அல்லது வணிக ஒப்பந்தத்தின் பகுதியாகவும் பார்க்கப்படுகிறது, இதில் இரண்டு நாடுகளும் வர்த்தக தடைகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவது சிறப்பு.

மேலும் இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரிகள் மற்றும் பிற தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க ஒப்புக்கொண்டது என்றும் டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்தியா அமெரிக்காவிலிருந்து எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் நிலக்கரி போன்ற துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான கூடுதல் வரியை ரத்து (remove/ lift) செய்துள்ளது இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய படியாக விவரிக்கப்படுகிறது.

இந்த வரி குறைப்பு ஒப்பந்தத்தில், இந்தியா அமெரிக்காவிலிருந்து சில பொருட்களை குறைந்த வரியில் இறக்குமதி செய்ய வழிவகுத்ததுள்ளது. உதாரணமாக கிராமிய/உயிரியல் பொருட்கள் (Agricultural & Food Exports) மீன்வகைகள், அரிசி (பாஸ்மதி, சாதாரண) ,மசாலாக்கள், தேன், பால் தயாரிப்பு உள்ளிட்ட பல செயலாக்க உணவுகளை அமெரிக்க சந்தையில் விலை போட்டிக்குத் தக்கதாக மாறும் என்றாலும் அமெரிக்காவில் எளிதாக விற்பனை வாய்ப்பு இருக்கும் என்கின்றனர். குறிப்பாக பெயிண்ட் சார்ந்த இந்திய பொருட்கள் மீதான ஆதிவாரண வரி இனி விதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டத்தில் generic மருந்துகள், தொழிற்சாலை சார்ந்த ஏரோபிளேன் பாகங்கள், ரத்தினங்கள் மற்றும் வைரம் சார்ந்த பொருட்கள் போன்ற தரமான வர்த்தகப் பொருட்கள் மீதும் வரி ரத்து/குறைக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்புகள் கூறுகிறது.

இந்த வரி குறைப்பு அறிவிப்பு பல நன்மைகள் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க வர்த்தகத்தில் இந்திய பொருட்கள் உயர் வரியை காரணமாக போட்டியில் பின் தங்குவது தவிர்க்கப்படுகிறது. வர்த்தக போட்டி மீண்டும் கிடைக்கும். மேலும் இந்திய பொருட்கள் மீதான மொத்த வரி சுமை குறையும், ஏற்கனவே அதிகமாக இருந்த 50% வரி விதிப்பில் இருந்து குறைவதால் இந்தியாவில் குடியிருப்பவர்களுக்கு விலை குறைந்து பயன்பாடு அதிகமாகும் என்பது வல்லுநர்கள் கருத்து.

இதனால் பெட்ரோல் டீசல் விலை குறையாது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களின் விலையை இணைப்பதற்கான பங்களிப்பாக இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை (tariffs) மட்டுமே ரத்து அல்லது குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எல்லா பொருட்களுக்கும் வரியை ஜீரோவாக மத்திய அரசு மாற்றுகிறதா? அல்லது குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமா? என்பதை இந்த அறிக்கையின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
#JUST IN : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்.17-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்..!
india vs us

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com