மீண்டும் சினிமாவில் களமிறங்க தயாராகும் உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்த உதயநிதி ஸ்டாலின் அரசியலில் முழு கவனம் செலுத்துவதற்காக ஏற்கனவே நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இருப்பினும் தற்போது அவர் மீண்டும் முழு நீள அரசியல் சார்ந்த திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது‌. அத்துடன் வணிக ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்த உதயநிதி கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துடன் சினிமாவில் இருந்து விலகியவர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து அரசியலில் பிசியாக இருந்து வரும் இவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியது இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. முழுக்க முழுக்க அரசியலை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருந்து பின்பு நடிகரானவர். 15 திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர். கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான 'மாமன்னன்' திரைப்படம் அரசியல் கதைக்களத்தைக் கொண்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படம் வணிக ரீதியாகவும் உதயநிதிக்கு வெற்றி படமாக அமைந்தது. அதற்குப் பிறகு அமைச்சரானவர் தொடர்ந்து துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகியுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசியல் சூழலில், திரைப்படங்கள் மூலமாகவும் தங்களது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உதயநிதியின் மகன் இன்பநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
NEET கட்டணத்தை ரீஃபண்ட் செய்ய தொடங்கியது NTA! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
உதயநிதி ஸ்டாலின்
logo
Kalki Online
kalkionline.com