சூப்பர் செய்தி..! பெண்களுக்கு இலவச பயிற்சியுடன் ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் தமிழக அரசு..!

புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு பெண்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளது.
வான்மகள் திட்டம்
வான்மகள் திட்டம்AI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

வாழ்க்கை பயணத்தில் ஆண்களுக்கு உறுதுணையாக இருக்கும் பெண்களிடம் பல தனித்திறமைகள் புதைந்துள்ளன. அவற்றை அடையாளம் கண்டு வெளிக்கொண்ட வருவதே பெண்கள் முன்னேற்றத்துக்கான அடித்தளம் ஆகும். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறும்போது குடும்பத்தின் வாழ்வாதாரம் உயரும். இதனை சாத்தியப்படுத்தும் வகையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு பெண்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளது.

அவற்றில் ஒன்றுதான் வேளாண் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ‘வெற்றி வான்மகள்’ திட்டமாகும். நவீன வேளாண் எந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தெளித்தல் மற்றும் பயிர்களை கண்காணிப்பதில் டிரோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால் ரசாயனங்களை மனிதர்கள் நேரடியாக கையாளுவது குறைவதுடன், வேளாண் பணிகளும் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது வேளாண் டிரோன்களை திறமையாக இயக்குவதற்கான தொழில்நுட்ப அறிவு பெற்றவர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பெண்களை டிரோன் இயக்குபவர்களாக மாற்றி அவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தவெக அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு அரசு செலவில் டிரோன் இயக்குபவர் பயிற்சி அளிக்கப்பட்டு உரிமம் வழங்கப்பட உள்ளது.

விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனமான கோவையில் உள்ள தமிழ்நடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை விமான பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக இந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

வான்மகள் திட்டம் - அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் :

இந்த பயிற்சிக்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

டிரோன் இயக்குதல் மற்றும் பராமரித்தல்,

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பு தொழில்நுட்பங்கள்,

துல்லிய வேளாண் பயன்பாடுகள்,

விமான போக்குவரத்து தலைமை இயக்குனரக விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்,

இயக்குதலில் பாதுகாப்பு,

தொழில்முனைவோர் மேம்பாடு,

செயல்முறை டிரோன் இயக்க பயிற்சிகள்,

கள செயல்விளக்கங்கள்

போன்றவை இந்த பயிற்சியின் போது அளிக்கப்படுகிறது.

மானியம் எவ்வளவு? :

சரி..பயிற்சி கொடுத்தால் மட்டும போதுமா? அவர்கள் புதிதாக டிரோன் வாங்கி வேளாண் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் அல்லவா?

* இந்தியாவில் வேளாண் டிரோன்களின் விலை பொதுவாக ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை அதன் கொள்ளளவு மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது.

* டிரோன் பயிற்சி பெற்ற தகுதியான 50 மகளிருக்கும் 50 சதவீதம், அதாவது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியமாக தமிழக அரசு வழங்குகிறது.

* ரூ.4 லட்சத்திற்கு டிரோன் வாங்கினால் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

* ரூ.10 லட்சத்திற்கு மேல் டிரோன் வாங்கினால் ரூ.5 லட்சம் வரை மானியமாக பெற முடியும்.

Tamil Nadu Cm Vijay
Tamil Nadu Cm Vijay

* அதேவேளையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறு மற்றும் குறு பெண் விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம், அதாவது ரூ.2 லட்சம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும்.

இதற்காக மட்டும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மாநில நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டம் இறுதி வடிவம் பெறும் நிலையில் உள்ளது. இந்த திட்டத்துக்கான அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சிக்கான தகுதிகள்:

* 18 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு மிகாமலும் இருக்கும் மகளிர் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

* 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* ஆதிதிராவிடர் (SC)மற்றும் பழங்குடியினப் (ST) பெண் விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
விவசாயம் முதல் எல்லை பாதுகாப்பு வரை: நவீன உலகில் ட்ரோன் புரட்சி!
வான்மகள் திட்டம்

உணவு, தங்கும் வசதியுடன் முழுநேர பயிற்சி :

* இதில் சேருபவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய முழுநேர பயிற்சி அளிக்கப்படும்.

* ஒரு தொகுப்பில் 80 பேர் என மொத்தம் 17 தொகுதிகளுக்கு 8 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது.

* ஒரு பயிற்சியாளருக்கு அரசு ரூ.30,000 செலவு செய்கிறது.

* 2 நாட்கள் வகுப்பறை பயிற்சி, ஒருநாள் ஆய்வக பயிற்சி, 5 நாட்கள் விமான தளத்தில் டிரோன் இயக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

* ‘முதலில் வருவபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* பயிற்சி முடிவில், பயிற்சி கையேடு, வேளாண் டிரோன்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை ஆவணம், டிரோன் இயக்குபவர்களுக்கான பதிவேடுகள் மற்றும் டிரோன் தொடர்பான பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வானில் விரியும் மாயாஜாலம்: டிரோன் ஒளிக்காட்சியின் பின்னணியில் உள்ள அறிவியல்!
வான்மகள் திட்டம்

நிபந்தனைகள் :

பயனாளிகள் டிரோனைப் பெற்ற நாளில் இருந்து குறைந்தது 4 ஆண்டுகளுக்கு அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்யவோ அல்லது மாற்றவோ மாட்டேன் என்று உறுதிமொழிப் பத்திரம் (Undertaking/Guarantee) அல்லது உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதியாகும்.