ஜூலையில் பாய்கிறது பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!!

சென்னை வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி ஜூலை மாதம் தொடங்கி வைக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மெட்ரோ ரயில்
Vadapalani-Poonamallee Metro image credit-metrorailnews.in
Updated on

சென்னை வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி ஜூலை மாதம் தொடங்கி வைக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து 4 மாதங்கள் ஆகியும் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் தரப்பில் மத்திய அரசிடம் திறப்பு விழா குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையே 14.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய 6 நிலையங்களில் பணிகள் நிறைவடையாததால் அங்கு மெட்ரோ ரயில்கள் நிற்காது. இவ்வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் வழங்கி இருந்தார். பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதல் பெறப்பட்டதால் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் ரெயில் சேவையைத் தொடங்க நேரம் ஒதுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பின்னர் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. வடபழனி - பூந்தமல்லி இடையே பணிகள் முடிவடைந்தது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே, அடுத்த மாதம் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜூலை மாதத்தின் 2 அல்லது 3-வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 2 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது. அதோடு இணைந்து சுமார் 15 கி.மீ தூரம் கொண்ட வடபழனி - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ சேவை..!
மெட்ரோ ரயில்

அதாவது வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தில் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு ஆகிய 10 நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும்.

பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் சந்திப்பு வரை 10 நிலையங்களில் மெட்ரோ ரெயில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 90 நிமிடமாக இருந்த பூந்தமல்லி - வடபழனி இடையிலான பயண நேரம் 30 நிமிடமாக குறையும். இது இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் (Phase II, Corridor IV) ஒரு பகுதியாகும். வடபழனியில் உள்ள தற்போதைய பச்சை வழித்தடத்துடன் அதாவது சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பாதையுடன் இணைக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
இனி கவுண்டருக்கே போக தேவையில்லை.. உங்க வாட்ஸ்அப் மூலமாகவே மெட்ரோ டிக்கெட் வாங்கலாம்..!
மெட்ரோ ரயில்

இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் பூந்தமல்லி முதல் போரூர், வடபழனி வரையிலான வழித்தடத்தில் மக்கள் அதிகம் மெட்ரோவை பயன்படுத்த தொடங்குவார்கள் என்பதால் சாலை போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

logo
Kalki Online
kalkionline.com