யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.! முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் ஒலித்த அந்த பாடல்.!

Vandhe madharam
CM Vijay
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மை பெற்று, தவெக தலைவர் விஜய் சற்றுமுன் தமிழகத்தின் 13-வது முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

பொறுப்பு ஆளுநர் அர்லலேகர் புதிதாக அமைந்துள்ள ஆட்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவை பதவி ஏற்கும் விழா நிறைவு பெறும்போது, இதுவரை வந்தே மாதரம் ஒலிக்கப்பட்டதில்லை.

ஆனால் தமிழக வரலாற்றில் முதல்முறையாக இன்று விஜய் தலைமையிலான அரசு பதவியேற்று முடித்தவுடன் வந்தே மாதரம் ஒலிக்கப்பட்டது

ஆரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் பதவி ஏற்க செல்லும் முன்பு, அவரைக் கட்டி அணைத்து கன்னத்தை கிள்ளி முத்தமிட்டார் முதல்வர் விஜய். மேலும் அவர் பதவியேற்கும் சமயத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும், தமிழக முதல்வருமான விஜய் ஆகியோர் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.

தவெக எம்எல்ஏ செங்கோட்டையன் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ரமணன், ராஜ் மோகன், கீர்த்தனா, டி.கே.பிரபு, நிர்மல் குமார், அருண் ராஜ் மற்றும் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
பதவியேற்ற முதல் நாளே இப்படி ஒரு வழக்கா.? விஜய்க்கு தலைவலியாக மாறிய ஒற்றை வாக்கு.!
Vandhe madharam

புதிய அரசு பதவி ஏற்பு விழாவின் நிறைவு விழாவில் வந்தே மாதரம் தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து ஆகிய மூன்றும் ஒலிக்கப்பட்டது. இதில் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்டாலும், இந்திய நாட்டிற்கு முன்னுரிமை அளித்து வந்தே மாதரம் முதலாவதாக பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டதன் பேரில், தற்போது நடைபெற்ற புதிய ஆட்சி பதவியேற்கும் அரசு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள்:
இளநீர் குடிக்கணும்னா இனி யோசிக்கனும் போல.. கிடுகிடுவென உயர்ந்த விலை..!!
Vandhe madharam
logo
Kalki Online
kalkionline.com