இன்று வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு!

varisu movie
varisu movie
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தில் ராஜு தயாரிப்பில் வம்சியின் இயக்கத்தில் ஹீரோவாக விஜய், ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா மற்றும் ஷாம், சரத்குமார், பிரபு, குஷ்பு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கிறது. வாரிசு திரைப் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ தகவலை பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னடத்து பைங்கிளி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் அடுத்ததாக நாளை வாரிசு திரைப் படத்தின் ட்ரெயிலரும் வெளியாக உள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், ராதிகா, குஷ்பூ, ஷாம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.வாரிசு திரைப்படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான் படத்தின் சிறப்பு.

திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் வியாபாரம் மற்றும் புரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியான நிலையில் 'ரஞ்சிதமே' என ஆரம்பிக்கும் இந்தப் பாடலை விஜய் மற்றும் மானஸி பாடியுள்ளார்கள். பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேகா. அவரது ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே’ என்ற பாடல் வரிகள் இளம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது .இந்த துள்ளிசை பாடல் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

வாரிசு திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் வெளியான நிலையில், வாரிசு படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்தையுமே சன் டிவி வாங்கி உள்ளது. இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள ட்ரெய்லரும் சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com