உடைந்ததா திமுக கூட்டணி? தவெக-வுடன் கைகோர்க்கும் திருமாவளவன்; தமிழக அரசியலில் புதிய திருப்பம்..!

திருமாவளவன் தவெக ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து தெரிவித்துள்ள கருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
thirumavalavan|தவெக கூட்டணி
thirumavalavan|தவெக கூட்டணிimage credit-indiatoday.in
Updated on

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக ஆட்சியை கைப்பற்றியது. தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் முதல் ஆளாக திமுகவில் இருந்து விலக ஆதரவு அளித்தது. அதனை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளும் தவெகவிற்கு ஆதரவளித்த நிலையில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு ஆதரவளித்த கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் தவெக இடம் அளித்துள்ளது.

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து, இன்னும் ஆறு மாதங்களில் இந்த அரசாங்கம் கவிழும் என எதிர்க்கட்சிகளான திமுகவும், அதிமுவிம் மாறி மாறி தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்து கொண்டிருக்கின்றன. மறுபுறம் தவெக ஆட்சியை கவிழ்க்க மறைமுகமாக பல தில்லுமுல்லு வேலைகளையும் எதிர்கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

அதே நேரம் தவெகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த ஆட்சி தொடர்ந்து ஐந்தாண்டுகள் நீடிக்குமென கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தவெக ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து தெரிவித்துள்ள கருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருவாரூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் தவெக ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து கேட்டதற்கு, தவெக அரசு ஐந்தாண்டுகள் நீடிக்கும். இது மக்களின் கட்டளை. இந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என நான் பெரிதும் நம்புகிறேன் என பதில் அளித்துள்ளார்.

அதோடு மதுரை மற்றும் சேலத்தில் அவருடைய போஸ்டர் மீது மர்ம நபர்கள் பெயிண்ட் வீசியுள்ளனர். இது சம்பந்தமாக பேசிய திருமாவளவன், சமூக விரோத கும்பல் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படுவது கவலை அளிக்கிறது.

தவெக கூட்டணி
thirumavalavan vijay|தவெக கூட்டணிimage credit-dinamani.com

குறிப்பாக தவெக ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டுமென விரும்புகிற சில கும்பல் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்களோ என்ற ஐயம் எழுவதாகவும், சமூக விரோதிகளின் வன்முறைக்கு விசிகவினர் இடம் தந்துவிடக் கூடாது என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், நாங்கள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் பங்கு பெற்றுள்ளோம். கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இதையும் படியுங்கள்:
என்னை துருப்பு சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள் – திருமாவளவன்..!
thirumavalavan|தவெக கூட்டணி

விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் அப்பொழுது முடிவு தெரிய வரும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் விசிக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டதாக பரவலாகப் பேசப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் திமுகவுடன் நட்பு ரீதியில் கூட்டணி தொடர்கிறது என கூறி இருந்தார். மேலும் திமுக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்ற அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனால் அவரது பேச்சு மாறி மாறி இருப்பதாக அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறோம் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என திருமாவளவன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்:
‘ஆளே இல்லாத கட்சிக்கு 8 சீட்டா?’ - விசிக, தேமுதிகவை மறைமுகமாக சாடிய வைகோ!
thirumavalavan|தவெக கூட்டணி

இதுவரை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக கட்சிகள் வெளியேறிய நிலையில் விரைவில் விசிகவும் அந்த பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com