குறைந்த வட்டி, பிணைய சொத்து தளர்வு: தமிழக அரசின் புதிய "வெற்றி மகளிர்" கடனுதவி திட்டம் அறிமுகம்!

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
Vettri Women Entrepreneurs Scheme|தொழில் கடன்
Vettri Women Entrepreneurs Scheme|தொழில் கடன்AI image
Updated on

தமிழ்நாடு அரசு மகளிர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் ரூ.500 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20%-ல் இருந்து 9.95% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்தவும் விரும்பும் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு இத்திட்டம் மூலம் கடனுதவி கிடைக்கும்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் எனப் பல திட்டங்களைக் கொண்டுவந்து, பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பெண்கள் சுயமாக முன்னேற்ற வேண்டும் என்பதற்காக மானிய கடன் உதவி திட்டம், சுய வேலைவாய்ப்பு உதவி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20%-ல் இருந்து 9.95% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் உதவிகள்:

* ஆண்டு வட்டி விகிதம் 10.20 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது.

* தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி

* கடன் பங்களிப்பு தொகையில் சலுகை

* பிணையச் சொத்து (Collateral) வழங்குவதில் தளர்வு/சலுகைகள்

* 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் மகளிர் தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் எளிதாக கடன் பெற்று பயனடைவர்.

* இதன் மூலம் 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* சொந்தமாகச் சிறு, குறு அல்லது குடிசைத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயது நிரம்பிய பெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

* அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக் குடும்ப வருமான வரம்பிற்குள் இருப்பவர்கள்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனாimage credit-maalaimalar

இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக "வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற

புதிய திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி, கடன் பங்களிப்பு தொகையில் சலுகை மற்றும் பிணையச் சொத்து வழங்குதலில் சலுகை ஆகிய உதவிகளுடன் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற வழி வகை செய்யப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர்.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போ வரும்..? அமைச்சர் கீர்த்தனா சொன்ன குட் நியூஸ்..!
Vettri Women Entrepreneurs Scheme|தொழில் கடன்

தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள மகளிர் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் நடப்பு நிதியாண்டில் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் "வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" மூலம் மகளிர் தொழில்முனைவோருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, தொழில்முனைவோரின் பங்களிப்பு 35 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், பிணையச் சொத்து 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் மற்றும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20 சதவீதத்திலிருந்து 9.95 சதவீதமாகவும் தளர்வு செய்யப்பட்டு, எளிய முறையில் தொழில்முனைவோர்களுக்கு மகளிர் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டில், "வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்" மூலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் 5.500 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்படும் குறு,

இதையும் படியுங்கள்:
மகளிருக்கு ரூ.2,500 எப்போது.? அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அப்டேட்.!
Vettri Women Entrepreneurs Scheme|தொழில் கடன்

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதோடு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com