

தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தொடர்ந்து பரபரப்பாகவே இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமே தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தான். முதல்வர் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு ஒட்டுமொத்த அரசியல் காட்சியே மாறி விட்டது.
திராவிடக் கட்சிகளின் கோட்டையை சுக்குநூறாக்கிய முதல்வர், தற்போது கட்சியை மேலும் பலப்படுத்தி வருகிறார். இதன் முதல்படியாக சமீபத்தில் லண்டனில் நடந்த கார் ரேஸிங் பந்தயத்தை சொல்லலாம். முதல்வர் விஜயோ அல்லது நடிகர் அஜித்தோ இல்லையென்றால் இந்த கார் ரேஸ் சாதாரணமாகத் தான் இருந்திருக்கும்.
ஆனால், நடிகர் அஜித் கார் ரேஸில் பங்கேற்க, பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க லண்டன் மாநகரேமே சிலிரித்துப் போனது. லண்டனில் நடந்த விஜய் - அஜித் சந்திப்பும் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.
நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், அவருடன் நட்பு பாராட்டுவது தவெக-வின் வருங்காலத்திற்கு நல்லது என சிலர் முதல்வர் விஜய்க்கு ஆலோசனை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தான் முதல்வர் விஜய், அஜித்துடன் நட்புறவை மேம்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகர் அஜித் மட்டும் அரசியலுக்கு வந்தால் முதல்வர் விஜய்யின் அரசியல் மற்றும் தவெக அஸ்தமனமாகி விடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித்திற்கு முத்லவராகும் யோகம் இருந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சொல்லியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இதற்கு தவெக அமைச்சர் பர்வேஸ் தரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
அமைச்சர் முகமது பர்வேஸ் கூறுகையில், “ஏற்கனவே அதிமுக போன்ற ஒரு கட்சி அஸ்தமனமாகி விட்டது என்ற வருத்தத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பார்” எனக் கூறினார்.
தவெக வரவுக்குப் பிறகு திராவிட கட்சிகள் வீழ்ச்சி அடைந்த நிலையில், இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அதிமுக மற்றும் நாதக தான். அதிமுக பல இடங்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை திருப்திகரமாகவே இருந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பலமாக அடி வாங்கியது.
இந்நிலையில் தவெக-வை தொடர்ந்து விமர்சித்து வரும் அதிமுக இடைத்தேர்தலில் வென்று, தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குதிரை பேர மேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க இடைத்தேர்தல் வெற்றி தவெக-வுக்கும் அவசியமான ஒன்று. தோல்வியில் இருந்து மீண்டு வர திமுக-வும் முயற்சி செய்யும்.
பலமான 3 கட்சிகளோடு, நாதக மற்றும் இடதுசாரிகளும் போட்டியிடுவதால் இடைத்தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.