

தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் முதல் 2 நாட்களில் மட்டும் ரூ.1,040 வரை குறைந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென விலை உயர்ந்தது.
நேற்றைய விலை நிலவரம்:
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 16) 1 கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 17) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து, ரூ.1,12,080-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்தது. ஆனால் அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ சந்திக்கவில்லை.
ஒருநாள் விலை ஏறினால், மறுநாள் குறைகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது மட்டும் தான் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.