திடீரென 'யூ-டர்ன்' எடுத்த முதல்வர் விஜய்.. டெல்லி அரசியலா? தமிழக உரிமையா?

விஜய் - சிவகுமார் சந்திப்பு: வைரலாகும் தென் மண்டல நதிநீர் பேச்சுவார்த்தை
CM Vijay
CM Vijay
Updated on

தென்னகத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளம் மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு பதிலாக தெலுங்கானாவின் துணை முதல்வரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரும் பங்கேற்றனர். இதுதவிர அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர். அவ்வகையில் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கெண்டனர்.

தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரும், தமிழக முதல்வர் விஜய்யும் அருகருகே அமர்ந்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக பேசினர். தமிழக முதல்வர் விஜய் பேசுவதை உன்னிப்பாக கவனித்துக் கேட்டார் கர்நாடக முதல்வர் சிவகுமார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திக்க தமிழக முதல்வர் விஜய், கர்நாடகாவிற்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த சந்திப்பு நிகழாமல் போனது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 31வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டது, பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு..! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
CM Vijay
CM vijay - D.K.Sivakumar
Tamilnadu - Karnataka

தென் மண்டல மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் பேசுகையில், “ மேகதாது அணையைக் கட்டினால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பயனளிக்கும். வறட்சி காலங்களில் அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் இரு மாநிலங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர பிரித்து விடக் கூடாது.

நதிநீர் பங்கீடு என்ற என்பதைக் காட்டிலும் நதிநீர் ஒத்துழைப்பு என்பதே மேலானது. கர்நாடகா பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்படுகிறது. சமத்துவம், வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய மூன்றும் கர்நாடகாவின் கொள்கைகள்" எனப் பேசினார்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!ஆதார் இல்லையென்றால் பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்காதா?
CM Vijay

தமிழக முதல்வர் விஜய் பேசுகையில், “கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நீர் அவசியம். எனவே மாநிலங்களுக்கு இடையேயான சட்டப்பூர்வமாகவும், முழு ஒத்துழைப்புடனும் நிர்வகிக்கப்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளையும் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது அவசியம்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது” என முதல்வர் விஜய் பேசினார்.

சில தினங்களுக்கு முன்பு தான் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் முதல்வர் விஜய். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால், இன்று நடந்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது எனப் பேசியிருக்கிறார். இதனால் முதல்வர் விஜய்யின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com