மாமண்டூர் முதல் மதுராந்தகம் வரை: முதல்வர் விஜய்யின் 45 கி.மீ ரோடு ஷோ - முழு வழித்தடம்!

இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக 39 இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களைச் சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்.
Thalapathy Vijay TVK party
Thalapathy Vijay TVK party
Updated on: 

மதுராந்தகத்தில் இன்று 45 கி.மீ தொலைவிற்கு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளார். இந்தநிலையில், மேல்மருவத்தூர் ஆதிபாரசக்தி கோவிலில் வழிப்பட்டு இந்த ரோட் ஷோவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரோட் ஷோவுக்காக 5 கி.மீட்டருக்கு ஒரு எம்.எல்.ஏ ஏற்பாடுகளை செய்ய த.வெ.க தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

மாமண்டூர் முதல் மாம்பாக்கம் வரை 39 முக்கிய இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களை சந்திக்கிறார். முதல்வர் விஜய்யின் ரோட் ஷோவிற்கு 10 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் 2.30 மணியளவில் மாமண்டூரில் தொடங்கி பிரம்மாண்ட 'ரோடு ஷோ' பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த வாகனப் பேரணியானது மாமண்டூரில் தொடங்கி புக்கத்துறை சந்திப்பு, படாளம், ஜானகிபுரம், மேலவலம்பேட்டை, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ், அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர் மற்றும் மாம்பாக்கம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று இறுதியில் மதுராந்தகத்தில் நிறைவடைகிறது.

பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரிவான மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்களைத் தடுக்கச் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் சார்பில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்கு முதலமைச்சர் விஜய் 45 கிலோமீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ மேற்கொள்கிறார். அதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து மதுராந்தகம் புறப்பட்டார்.

விஜய் ரோடு ஷோ நடத்தும் ஊர்களின் முழு விவரம் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார். அவரது ரோடு ஷோ பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாமண்டூர் , புக்கத்துறை சந்திப்பு, படாளம் சந்திப்பு, ஜானகிபுரம் சந்திப்பு, மேலவலம்பேட்டை சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் North By Pass Entrance, மதுராந்தகம் South By Pass, அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர், மாம்பாக்கம், மதுராந்தகம்.

காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் மதுராந்தகம் தொகுதி சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

இந்த சாலைவலத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாலைவலத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, சாலைவலம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் இரட்டை வெற்றி: அரசியலில் அப்பா... சினிமாவில் மகன்.!
Thalapathy Vijay TVK party
logo
Kalki Online
kalkionline.com