ஜூன் 18-ல் இடைத்தேர்தல்.! டெல்லி நாடாளுமன்றத்தை குறிவைக்கும் தவெக..?

CM Vijay
By Election
Updated on

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சிவி.சண்முகம் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனது எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இந்த காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 1-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய்படும். போட்டி இருந்தால் ஜூன் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மத்திய பிரதேசத்தில் அஜித் பவார் மற்றும் தமிழ்நாட்டில் சி.வி.சண்முகம் ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 18 இல் நடைபெறுகிறது.

சிவி.சண்முகம் ராஜினாமா செய்ததன் காரணத்தால், தற்போது அந்த இடத்தை தவெக கைப்பற்ற முனைப்பு காட்டும் என தெரிகிறது. இருப்பினும் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு தவெக எம்பி பதவியை விட்டுக் கொடுக்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதன்படி பிரவீன் சக்கரவர்த்தியை மாநிலங்களவை எம்பி வேட்பாளாராக தவெக முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அமைச்சர் பதவிக்கு வாய்ப்பிருக்கும் என்ற காரணத்தை எண்ணி, தனது எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார் சி.வி சண்முகம். ஆனால் தமிழக அமைச்சரவையில் தவெக-வுக்கு 31 அமைச்சர்கள், காங்கிரஸ் 2, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1 மற்றும் விசிக 1 என 35 அமைச்சர்களின் இடங்களும் தற்போது நிரப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை. ஏற்கனவே இரண்டாக பிளவுப்பட்டு இருக்கும் அதிமுக கட்சியை ஒன்றிணைக்க கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ஒரு நிலையில், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என சிவி சண்முகம் தரப்பினர் 1,400 நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: தங்கம் குறைந்தது.. வெள்ளி உயர்ந்தது.. விலையில் அதிரடி மாற்றம்.!
CM Vijay

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் தற்போது பிரியும் அபாயத்தில் உள்ளன.

இந்நிலையில் தவெக கூட்டணி வளையத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வெகு விரைவில் இணைந்து விடும் என்றே தெரிகிறது. ஏற்கனவே இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் தவெகவுடன் தான் கூட்டணி என அறிவித்துவிட்ட நிலையில், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் அது குறித்து முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று பொறுப்பேற்ற இரண்டு புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

வன்னி அரசு - சமூக நீதித் துறை

ஷாஜகான் - சிறுபான்மையினர் நலத்துறை

இருப்பினும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதால், தவெக-வுடன் இனி கூட்டணி வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : விலைவாசி உயருமா? பெட்ரோல், டீசலை தொடர்ந்து சுங்கக் கட்டணமும் உயர்வு.!
CM Vijay
logo
Kalki Online
kalkionline.com