#JUST IN: தங்கம் குறைந்தது.. வெள்ளி உயர்ந்தது.. விலையில் அதிரடி மாற்றம்.!

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
Gold Price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.

அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய மக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கடந்த வாரம் தெரிவித்தார். இந்நிலையில் மே 13-ம் தேதி நள்ளிரவு முதல் தங்கத்தின் மீதான இறக்குமதி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதியிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.

நேற்று (மே 21) தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,18,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,810-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.290-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 22) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,18,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,780-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.295-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,95,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
பட்டதாரிகளுக்கு பம்பர் ஆஃபர்: மத்திய அரசில் 12,256 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

மே 21: 1 கிராம் - ரூ.14,810 1 சவரன் ரூ.1,18,480

மே 20: 1 கிராம் - ரூ.14,750 1 சவரன் ரூ.1,18,000

மே 19: 1 கிராம் - ரூ.14,870 1 சவரன் ரூ.1,18,960

மே 18: 1 கிராம் - ரூ.14,750 1 சவரன் ரூ.1,18,000

மே 17: 1 கிராம் - ரூ.14,750 1 சவரன் ரூ.1,18,000

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

மே 21: 1 கிராம் - ரூ.290

மே 20: 1 கிராம் - ரூ.285

மே 19: 1 கிராம் - ரூ.300

மே 18: 1 கிராம் - ரூ.300

மே 17: 1 கிராம் - ரூ.290

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையை மிஞ்சும் இளைஞர்களின் மன அழுத்தம்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Gold Price
logo
Kalki Online
kalkionline.com